பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. *pugnyeo-ul s-au– okstersosulub supuuë okstersosuute 72 பெருமையை பலத்தை வல்லமையைப் பரசுராமனே ஏற்றுக் கொண்டு விட்டான். இங்கு பரசுராமன் வாய் மொழியாக இராமன் திருமாலே வென்று கம்பன் கவிதை குறிப்பிடுவதைக் காண்கிறோம். இனி என் அம்பிற்கு இலக்கம் எது?” என்று இராமன் கேட்ட கேள்விக்குப் பரசுராமன், “எய்த அம்பு இடை பழுது எய்திடாமல் என் செய்தவம் யாவையும் சிதைக்கவே யெனக் கையவன் நெகிழ்ந்தனன், கணையும் சென்றவன் மையறுதவமெலாம் வாரி மீண்டதே!” பரசுராமன் கொடுத்த வில்லை வளைத்து இராமன் தொடுத்த அம்பிற்கு அது “பழுதாகாமல் எனது தவமனைத்தையும் இலக்காக்குகிறேன்” என்று அந்த மாமுனிவன் கூற அந்த அம்பும் பரச்ராமனின் தவத்தையெல்லாம் வாரிக்கொண்டு இராமனிடம் மீண்டும் வந்து சேர்ந்தது என்று கம்பன் மிக அழகாக எடுத்துக் கூறுகிறார். தனது தவவலிமை, இதரவல்லமையனைத்தையுமிழந்த பரசுராமன் முழுமையாக இராமனுக்குப் பணிந்து, “எண்ணிய பொருளெலாமினிது முற்றுக மண்ணிய மணிநிற வண்ண வண்துழாய்க் கண்ணிய, யாவர்க்கும் களை கண் ஆகிய புண்ணிய விடை யெனத்தொழுது போயினான்.” இவ்வாறு பரசுராமனை (பிராமணனை) இராமன் (கூடித்திரியன் - அரசன்) வென்று விட்டான் என்னும் செய்தியை மிகவும் அழகாகக் கம்பன் எடுத்துக் காட்டுவதைக் காண்கிறோம். அரசன் திருமாலுக்கிணையானவன். இராமன் மணிவண்ணன், துளசிமாலையணிந்த திருமால், யாவர்க்கும் பற்றுக் கோடாக விருக்கும் புண்ணியன், என்றெல்லாம் கம்பன் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.