பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. sub-gyeo–u st–sur– Genereosulub supunë Glærereoeute 74 இராமன் தனது தந்தையின் சத்தியத்தைக் காக்கக் காட்டுக்குச் செல்லப் புறப்பட்டான். கங்கைக் கரைக்கு வந்து சேர்ந்தான். அங்கிருந்த முனிவர்களனைவரும் இராமபிரானை வர வேற்றனர். தங்களுடைய செல்கதி, தங்களுடைய தவத்தின் குறிக்கோள் தாங்கள் தவம் செய்யுமிடத்திற்கே வந்து சேர்ந்துள்ளதாகக் கருதி மகிழ்ச்சி யடைந்து இராமனைக் காண வந்தனர். "கங்கை யென்னும் கடவுள் திரு நதி தங்கி வைகும் தபோதனர் யாவரும் எங்கள் செல்கதி வந்த தென்றேமுறா அங்கண் நாயகர் காண வந்து அண்மினார்” என்று கம்பநாடர் குறிப்பிடுகிறார். அரக்க வடிவத்திலிருந்த விராதனின் சந்திப்பு இராமன் தண்ட காரண்யத்தை அடைந்த போது, அரக்க வடிவத்திலிருந்த விராதன் என்பவன் இராம இலக்குவர்களைச் சந்தித்தான். கதைப் பெருக்கத்திற்கும், ஒட்டத்திற்குமாக, இராம பிரானின் பெருமைகளை விரிவு படக் கூறுவதற்குமாகப் பல இடை நிகழ்ச்சிகளும் சேர்க்கப் பட்டதில் இந்த விராதன் கதையும் ஒன்றாகும். விராதன் என்பவன் முன்பு தும்புரு என்னும் பெயர் கொண்டு குபேரனுடைய உலகில் வாழ்ந்தவன். ஒரு நாள் குபேரன் சபையில் நடனமாடிக் கொண்டிருந்த அரம்பையை அவன் காதலித்தான். அதனால் அரக்கனாகும் படி சபிக்கப்பட்டான். அவன் மீதான சாபம் இராமனுடைய கால்படும் போது தீரும் என்றிருந்தது. அதன்படி சாபம் பெற்ற தும்புரு, அரக்கனாகி விராதன் என்னும் பெயரில் வனத்தில் இராமனைச் சந்திக்கிறான். விராதன் மிகுந்த ஆற்றலும் வல்லமையும் கொண்டவன். ஐம்பெரும் பூதங்களத்தனையும் சேர்ந்து ஒரு வடிவாய்த்திரண்ட பலம் கொண்டவன். பெருத்த குரல் கொண்டவன், ஒரு லட்சம் மதயானைகளின் பலத்தையுடையவன். ஆதி நான்முகனுடைய வரத்தைப் பெற்றவன். அத்தகைய அசுரபலம் கொண்ட விராதன்