பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. stol gyeo–ul s-cut= கொள்கையும் சமயக் கொள்கையும் 76 நீயறிதி எப் பொருளும் அவையுன்னை நிலையறியா மாயையிது வென் கொலோ? வாராதே வரவல்லாய்” என்றும், “பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர், இருவினையும் உடையார் போல் இருந்தவம் நின்றியற்றுவார் திருஉறையும் மணி மார்ப, நினக்கென்னை செயற்பால ஒருவினையும் இல்லார் போல் உறங்குதி யால் உறங்காதாய்” என்றும் கம்பர் கூறுகிறார். தாயை அறியாத கன்றில்லை. கன்றையறியாத தாயில்லை. இராமன் உலகின் தாயைப் போன்றவன். அவன் எப்பொருளும் அறிவான். அவன் அரிய பெரிய சமயங்களெல்லாம் புகலும் புத்தேளிர், திருவுறையும் மணிமார்பன், வராகவடிவமெடுத்து பூமகளை மீட்டவன். பாற்கடலில் பள்ளிக் கொண்டவன், என்றெல்லாம் வாழ்த்தி உன் கருணையால் நான் பிறவிக்கடல் கடந்தேன் என்றெல்லாம் விராதன் வாயால் ரீராமனுடைய திருவ்வதாரப் பெருமையைக் கம்பன் எடுத்துரைக்கிறார். மேலும் சில துரம் இராமனும் இலக்குவனும் சீதையும் தாண்டக வனத்தில் சென்றனர். அங்கு சாரபங்கன் என்னும் வயோதிக முனிவரின் ஆசிரமத்தையடைந்தனர். அங்கிருந்த இந்திரன் இராமனைக் கண்டவுடன் வணங்கி நின்று வாழ்த்துகிறான். இந்திரன் கூறிய வாசகங்களைக் கம்பன் மிகவும் அழகாக ஆழ்ந்த தத்துவ ஞானக் கருத்துக்களில் குறிப்பிடுவது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அதில் இந்திரன் வாயிலாக இராமனுடைய கடவுள் தன்மையைக் கம்பன் மிகவும் விளக்கமாகக் கூறுகிறார், தோய்ந்தும் பொருளனைத்தும் தோயாது நின்ற சுடரே,