பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ійшейт — 5әсъ ғарғлило штія»я —ғу запалғайт 79 அனுமன் மற்றும் சுக்கீரீவன் வாய் மொழியாக இராமனும் இலக்குவனும் கவந்தன் கூறிய மலைப் பகுதிக்கு வருகின்றனர். அனுமனையும் சுக்கீரிவனையும் சந்திக்கின்றனர். தங்கள் தங்கள் கதைகளைப் பரஸ்பரம் எடுத்துரைத்து நட்புக் கொள்கின்றனர். வாலியைக் கொல்வதற்கு இராமனுக்கு ஆற்றல் உள்ளதாவென அனுமனும் சுக்கீரிவனும் தனியாக ஆலோசனை செய்கின்றனர். ஆரம்பத்தில் சுக்கீரிவனுக்கு இராமனுடைய பலத்தின் மீது போதுமான நம்பிக்கை ஏற்பட்டிருக்கவில்லை. அப்போது அனுமன் “எந்தவிதமான சந்தேகமும் நமக்கு வேண்டாம் இராமனுடைய சங்கு சக்கரக்குறிகள் அவரிடம் தென்படுகின்றன. வில்லோடு வந்துள்ள இராமன் நிச்சயமாக திருமாலின் அவதாரம்தான் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக வந்துள்ளான்” என்று பொருள்படக் கூறுகிறான். இதுவே அனுமன் வாய் மொழியாகக் கம்பனுடைய வாக்கு, "சங்கு சக்கரக் குறியுள தடக்கையில் தாளில் எங்கும் இத்தனை யிலக்கணம் யாவர்க்குமில்லை செங்கண் விற் கரத்து இராமன் அத்திரு நெடுமாலே, இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு” எனவும், இன்னும், “என்னை யின்றவன் இவ்வுலகுயாவையும் ஈன்றான், தன்னை யின்றவற்கு அடிமை செய்தவம் உனக்கு அஃதே, உன்னையின்ற எற்கு உறுபதம் உளது என வுரைத்தான்” என்றும் கம்பன் குறிப்பிடுகிறார். எனவே இவன் உலகமனைத்தையும் படைத்தவன், அவனுக்கடிமை செய்து நற்கதி யடைவோம் என்று அனுமன் முடிக்கிறான். அனுமன் சொல்லின் செல்வன்” என்றும் “தர்மத்தின் தனிமை தீர்த்தான்” என்றும் “மந்திரம் கெழுநூல் மரபுணர்ந்து உதவுவான் என்றும்” “பொய்யிலாதவன்” என்றும் பலவாறாகக் கம்பனால் புகழப்படுபவன். அனுமன் அதிகம் பேச மாட்டான். ஆனால்