பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. *ырыgрвоны கடவுட் கொள்கையும் சமயக் கொள்கையும் 80 சொல்வதைச் சரியாகச் சொல்பவன் என்று பெயர் படைத்தவன். அத்தகைய பாத்திரத்தின் வாயிலாக இராமன் திருமாலின் அவதாரம் என்பதைக் கம்பன் முன் கூட்டியே கூறிவிட்டான். அதன் பின்னர், இராமனுடைய வில் அம்புகளின் வலிமையைக் காண விரும்பி சுககிரீவன் ஏழு மராமரங்களின் மீது அம்பை விடக் கோருகிறான். இராமனுடைய அம்பு அதைச் செய்து முடிக்கிறது. சுக்கீரீவன் இராமனுடைய வீரத்தை, வில்லின் வலிமையை உணர்ந்து கீழ்க்கண்டவாறு கூறுகிறான். “வையம் நீ, வானும் நீ, மற்றும் நீ மலரின் மேல் ஐயன் நீ ஆழிமேல் ஆழி வாழ்கையன் நீ செய்ய தீயனைய அத்தேவும் நீ நாயினேன் உய்ய வந்து தவினாய் உலகம் முந்து உதவினாய்” என்று உலகமும் வானம் மற்றுமுள்ள அனைத்தும் பாற்கடலில் பள்ளி கொண்டவனும் நீயேவென்று கூறி சிக்கீரிவன் இராமனிடம் சரணடைவதாகக் கம்பன் கூறுகிறார். கம்பனுடைய இராமாயண காவியத்தில் சரணாகதி தத்துவமும் பக்தி தத்துவமும் அதிகமாகப் பேசப்படுவதைக் காணலாம். ஆழ்வார்கள் அடியவர்க்கு அடியார் எனக்குறிப்பிடுவதைப் போல கம்பனும் தனது பாத்திரப் படைப்புகள் மூலம் அக்கருத்துக்களை எடுத்துக் காட்டுகிறார். வாலி சுக்கிரீவர்களைச் சண்டையிடச் செய்து இராமன் மறைந்து நின்று வாலி மீது தனது அம்பை ஏவினான். இராமனுடைய அம்பு வாலியை வீழ்த்தியது. தன்னை வீழ்த்திய அம்பு யாருடையது என வாலி அதை இழுத்துப் பிடித்துப் பார்க்கிறான். அது இராமனுடைய அம்பு என்பது வாலியின் கண்ணுக்குப் புலப்படுகிறது. அது பற்றிக் கவியின் வாக்காகக் கம்பன் கூறுவது, “மும்மை சால் உலகுக் கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்