பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйшейт —oәсъ зоратили штварал- se confiәләайт 8| தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத்தானே இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் செம்மை சேர் நாமம் தன்னைக் கண் களில் தெரியக் கண்டான்” என்று இராம நாமத்தின் பெருமையைக் குறிப்பிடுகிறார். வாலி முதலில் இராமனைப் பழிக்கிறான். நல்லறம் துறந்தானென்றும் முறைதவறி நடந்தானென்றும், நீதி தவறினானென்றும் கூறி என்ன காரியம் செய்தாய் என்று இராமனைக் கேட்கிறான். “என்பால் எப்பிழை கண்டாய்” என்று கேட்கிறான் “நீ செய்தது வீரமன்று விதியன்று” என்று கூறுகிறான். பலவாறான நீண்ட வாதங்களுக்குப் பின்னர் வாலி இராமனை யாரென உணர்ந்து பேசுகிறான். “ஏவுகூர் வாளியால் எய்து, நாய் அடியனேன் ஆவிபோம் வேலை வாய் அறிவு தந்தருளினாய் மூவர் நீ, முதல்வன் நீ, முற்றும் நீ, மற்றும் நீ பாவம் நீ தருமம் நீ பகையும் நீ, உறவும் நீ” என்று அனைத்தும் உன் வடிவம் என்னும் தத்துவத்தை வாலியின் வாயிலாகக் கம்பன் தெளிவு பட உணர்த்துகிறான். வானர சேனை திரட்டப்படுகிறது. கடலென வானரப்படை திரண்டு நிற்கிறது. இராமனே கூட அப்பெரும்படையைக் கண்டு வியக்கிறான். திரண்டு நிற்கும் அப்படையின் எல்லையைக் காண முடியவில்லை என்று வியப்படைகிறான். இப்படையை அளக்க முடியாது என்று கூறுகிறான். அது பற்றிக் கம்பனது உவமை அற்புதமானது, "ஈசன் மேனியை ஈரைந்து திசைகளை ஈண்டில் ஆசில் சேனையை ஐம்பெரும் பூதத்தை அறிவைப்