பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கடவுட் கொள்கையும் சமயக் கொள்கையும் للابلات كلكتيلاكاتق2 பேசும் பேச்சினை, சமயங்கள் பிணக்குறும் பிணக்கை வாச மாலையாய் ! யாவரே முடிவெண்ண வல்லார்?” இந்தப் பாடலைக் கம்பனுடைய மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றாகக் கூறலாம். கம்பன் கருத்தில், முடிவு காண முடியாதது, எல்லை காண முடியாதது, ஈசன் மேனி, பத்து திசைகள், ஐம்பெரும் பூதங்களின் ஆற்றல், அறிவு பேசும் பேச்சுக்கள், சமயங்களின் பிணக்குகள் என்று வானரப்படையின் திரளுக்கு உவமை கூறியிருப்பது மிகச் சிறப்பான கருத்துக்கள் நிறைந்துள்ளதைக் காண்கிறோம். இந்த உவமைகளில் சிறந்தTதத்துவங்களும் நிறைந்திருப்பதைக் காண்கின்றோம். / இதில் சமயங்களின் வேற்றுமைகளும் சமயச் சண்டைகளும் முடிவு காண முடியாத அளவில் உள்ளதை மனம் வருந்திக் கம்பன் எடுத்துக் காட்டுகிறார். இதுவும் கம்பனுடைய சமயக் கொள்கை பற்றியக் கருத்துக்களில் ஒன்றாகும். சமயச் சண்டைகள் பற்றிக் கம்பன் இங்கு தனது கவலையை வெளிப்படுத்துகிறார். இந்தப் பெரும் வானரப்படையால் 'பாவம் தோற்கும், தர்மம் வெல்லும்”என்று இலக்குவன் கூறுகிறான். இந்தத் தத்துவம் பாரத நாட்டில் தொன்று தொட்டு நிலவியுள்ள தத்துவமாகும். கம்பனும் இக்கருத்தைத் தனது காவியத்தில் பல இடங்களிலும் எடுத்துக் கூறி நமது மனதில் பதிய வைக்கிறார். கம்பனுடைய சமயக் கொள்கையில் மற்றொரு முக்கிய கருத்து அருந்ததி மலையைப் பற்றிக்கூறும் பாடலாகும். “அரன் அதிகன் உலகளந்த அரியதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்று அடை வரியப் பரிசே போல் புகல் அரிய பண் பிற்றாமால்” என்று கம்பன் கூறுவது சைவ வைணவ சமய சமரசக் கொள்கையை எடுத்துக் காட்டுகிறது. இரு சமயங்களின் ஒற்றுமைக்கான முயற்சிக்குக் கம்பனுக்கு உடன்பாடு இருப்பது புலனாகிறது.