பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


என்ற கைகேயியின் ஒரு சொல்லுக்குக் கட்டுப்பட்டு மகிழ்ச்சியுடன், 'தாயே! தந்தை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை, 'உன்னுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்; மறக்க மாட்டேன்' என்றதோடன்றி.

"பின்னவன் பெற்ற செல்வம்
         அடியனேன் பெற்ற தன்றோ!
என் இனி உறுதி அப்பால்"

(கம்பன்-1604)


என்று கூறி கைகேயியிடம் விடை பெற்றுக் கொண்டு நகரினின்று நீங்குகின்றான்; காட்டை நோக்கி நடக்கின்றான். மனித உலகத்தில் இத்தகு பண்பாட்டின் மணி முடியை வரலாறு கண்டதில்லை. கம்பனின் இராமகாதையைத் தவிர வேறு காப்பியங்களில் இருப்பதாகத் துணிந்து கூற இயலவில்லை. அடுதலும் பொருதலும் அழித்தலும்தான் அரசியல் என்று வரலாறுகள் கூறுகின்றன.

பேரரசு தனக்கு என்ற பொழுது இராமன் மகிழ்ந்திலன்; பேரரசு இல்லை— காடுதான் என்ற நிலையிலும் இராமன் கவலைப்படவும் இல்லை. சுக்கிரீவன், வாலியிடம் எல்லாம் உனக்குத்தான் என்று சொல்லிய பின்பும் ஆத்திரத்தில் சுக்கிரீவனை அடித்து விரட்டுகின்றான். சுக்கிரீவனின் மனைவி உருமையையும் கவர்ந்து கொள்கிறான். வாலி, சந்தேகப் பிராணியாகவும் ஆத்திரக்காரனாகவும் விளங்கினான். மேலும் தன்னை; யாரும் வெல்லாமல் இருக்கும்படிப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தவம் செய்து வரம் வாங்கிக் கொண்டிருக்கிறான். அது என்ன வரம்? வாலியுடன் பொருந்துகின்றவர்களின் பலத்தில் பாதி பலம் வாலியைச் சேர்தல் வேண்டும்; வாலிக்கு உரிமையாதல் வேண்டும். இப்படி ஒரு வரம்! நமது வழிபடும் கடவுள்களும் இத்தகைய வரங்களைக் கொடுப்பது தான் வேடிக்கை; முள்ளை