பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல், சமூகம்


களத்தில் தோற்றான்! ஆயுதங்களை இழந்தான்! வெறுங்கையுடன் நின்றான்.

தாயிற் சிறந்த தயவுடைய இராமன், இராவணனுக்குப் பரிவுரை கூறுகிறான்; “இராவணா! பெரும் போரில் வெற்றி பெற வீரம் மட்டும் போதாது. அறவழியிலும் ஒழுகுந்திறன் வேண்டும்! அறத்தினைத் துறந்தவர்கள் தேவர்களேயானாலும் போரில் வெற்றி பெற இயலாது. இராவணா, உயிர் பிழைத்துப் போ! ஆயுத மில்லாது வெறுங்கையினனாக நிற்கும் உன்னை நான் கொல்ல மாட்டேன்!” என்றான் இராமன். ‘ஆண்மைக் குணமுடைய இராவணனே, கேள்! உனது நால்வகைப் படைகளும் சிதறி ஓடிவிட்டன. இன்று போ! நாளை வா!’ என்றான்.


'ஆள்ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
    பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா!' என நல்கினன்-நாகு இளங் கமுகின்
   வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்!

(கம்பன்-7271)

மீண்டும் இராவணனுக்கு, படைதிரட்டிக் கொண்டு வர, போராட வாய்ப்பளிக்கின்றான்– அறநெறி யண்ணல் இராமன்! காலம் கருத்தை மாற்றும் என்ற அடிப்படையில் ‘இன்று போய், நாளை வா’ என்று வழங்கப் பெறும் கால இடைவெளியில் இராவணன் சிந்திப்பான்; சீதையை அனுப்பி வைப்பான் என்று இராமன் நம்பி இருக்கக் கூடும். இராமனது நம்பிக்கை முற்றிலும் நிறைவேறாது போனாலும் ஓரளவு பயன் தந்தது.

திசை யானைகளை வென்ற வலிமை; சிவம் உறையும் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முயன்ற தோள் வலிமை, நாரதர் மகிழ இனியன கூறிய நாவாற்றல்; சிவபெருமான் அருளிய வாள்; வாகை மாலைகள் சூடியிருந்த