பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

கம்பன் ஒரு இலட்சிய நாட்டைப் படைக்க ஆசைப்படுகிறான்; அந்த விருப்பத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவிக்க, இராமாயணம் இயற்றுகிறான்.

கோசல நாடு பற்றி மிக உயர்வாகப் பாடுகிறான். ஆனால், கோசல நாடு உண்மையில் கம்பனின் இலட்சியத்திற்கு இசைந்திருந்ததா? என்று வினாத் தொடுத்தால் கிடைக்கும் விடை எதிர்மறையாகத்தான் அமையும். கூனியின் துன்பமும் ஆட்சிக் கட்டிலில் இருப்போர் பக்கம் சொத்துக்கள் எல்லாம் போய்விடும்; மற்றவர்கள் உறவினர் கூட (கைகேயியை) கேட்டுத்தான் வாங்க வேண்டும் என்ற உண்மையையும் அறியலாம். கம்பன் பாடிய நாட்டுப்படலம் கம்பனின் இலட்சிய நாடு பற்றியதேயாம், என்று உணர முடிகிறது.

சொற்பொழிவு முழுதும் கம்பனின் விருப்பத்தை, ஆர்வத்தை, இலட்சியத்தைக் காட்ட முயற்சி செய்து உள்ளோம். மன நிறைவா? சொல்லத் தெரியவில்லை! வாசகர்கள்தாம் சொல்ல வேண்டும்! வாய்ப்பளித்த சென்னை கம்பன் கழகத்திற்கும் அறக்கட்டளையின் இன்றைய புரவலர் திரு. ஏவி.எம். சரவணன் அவர்களுக்கும் நன்றி பாராட்டு! வாழ்த்துக்கள்!

கம்பன் புகழ் வாழ்க! கன்னித் தமிழ் வாழ்க!
– அடிகளார்