பக்கம்:கம்பன் கலை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கம்பன் கண்ட புலன் அடக்கம் புலன் அடக்கம் என்ற சொல் திருவள்ளுவருடைய காலத்திற்கு முன்னர்த் தொட்டு, இத்தமிழ் நாட்டிலே வழங்கிவந்த ஒன்று. மனிதனுடைய சிறப்பைப் பறைசாற்றுகின்ற சிலவற்றுள் புலன்களும் ஒன்று. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று தமிழிலேயும், சப்த, ஸ்பரிஸ், ரூப, ரஸ், கந்தம் என்று வடமொழியிலேயும் பேசப்படுகின்றன. இவை இறைவனுடைய படைப்பின் இரகசியத்தை ஆராய்ந்து பார்த்தால், மனிதன் அனுபவிக்க வேண்டும் என்ற பெருங் கருணையினாலே ஐந்து புலன்களையும் மனிதன் அனுபவிப்பதற்கு, ஐந்து பொறிகள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்படுகின்ற இந்த ஐந்து பொறிகளும், ஐந்து புலன்களை அனுபவித்து நம்முடைய வாழ்வை முழு வாழ்வாக மாற்றுகின்ற கடப்பாடுடையன. இந்தப் பொறி புலன்களோடு கூடி வாழாத காலத்து மனிதனுடைய வாழ்வு, கேவலம் விலங்கு வாழ்வாகக்கூட இல்லாமற் போதலை அறிகின்றோம். ஒன்று தெரியலாம். எல்லா அறிவும் படைத்த மனிதன் சில நேரங்களிலே மயக்கமுற்றுக் கிடப்பானேயானால், அவனுடைய எந்தப் பொறி புலனும் வேலை செய்யாதிருத்தலைக் காண்கின்றோம். அப்படி மயக்கமுற்ற நிலையிலே, எதிரே இருக்கின்ற துணுக்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/101&oldid=770609" இலிருந்து மீள்விக்கப்பட்டது