பக்கம்:கம்பன் கலை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கம்பன் கலை எங்கேயோ யாரையோ போய்க் கேட்டான் - தவம் எப்படிச் செய்வதென்று. அவர் இந்தத் திருமூலருடைய கருத்தை நன்கு அறிந்தவர்போல இருக்கிறது. அவர் சொன்னார்: "புலன் அடக்கம் தேவையே தவிர, பொறி புலன்களையெல்லாம் நீ கொன்றுவிடவேண்டாம் அப்பர். எப்படி வேண்டுமானாலும் தவஞ் செய்யலாம்” என்றார். ஆற்றங்கரையில் ஒரு மூலையிலே துறவி அமர்ந்தான். கண்களைத் திறந்து அப்படியே பார்த்துக்கொண்டே யிருந்தான்-ஏகாக்கிரசித்தனாக யாரோ ஒரு பெண் அந்த வழியிலே போனாள்; மனம் கெட்ட்து. கண்ணைத் திறந்து கொண்டிருந்ததனாலேதானே இந்தப் பிழை ஏற்பட்டது. இனி கண்ணை மூடிவிடுவோம் என்று மறுநாள் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்தான். அவள் அந்த வழியே வழக்கமாகப் போகிறவள். ஆதலால் மறுநாளும் போனாள். காலிலே போட்டிருக்கின்ற மெட்டி கல் கல் என்று ஒலி எழுப்பியது. தவம் அன்றும் கெட்டுவிட்டது. உடனே துறவி, இதுவும் தவறு. கண்ணை மூடிக் கொண்டிருந்தும் பயன் இல்லை என்று நினைத்தார். காதுக்கும் கொஞ்சம் பஞ்சு அடைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைந்து அவ்வாறே செய்தார். மூன்றாம் நாள் கண்ணை மூடிக் கொண்டார், காதிலே பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டார். ஏறத்தாழ அந்த நேரம் வந்தது. நேற்று இந்த நேரத்தில்தானே அந்த அம்மையார் போனார்கள் என்று மனதிலே நினைத்தார். இதற்கு எந்தப் பஞ்சை வைத்து அடைப்பது? பொறி புலன்கள் அடக்கம் வேண்டும் என்றால்-இவற்றையெல்லாம் வைத்து ஆளுகின்றதாகிய மனத்தை அடக்குவது என்பது கருத்தே தவிர, கேவலம் கண்ணை மூடி, காதை மூடிக்கொண்டிருப்பது என்பது கருத்தன்று. காடுகள் சென்று, கனசடை வைத்து, நீ எந்தப் பொருளைத் தேடுகின்றாய் என்று ஒர் அனுபவ ஞானி கேட்கின்றார்; ஏன்? அவுர் கண்ட பேருண்மை அது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/104&oldid=770612" இலிருந்து மீள்விக்கப்பட்டது