கம்பன் கண்ட புலன் அடக்கம் 95 இறைவன் கண்ணைக் கொடுத்தான் பார்ப்பதற்காக நீ தவறான பொருளைப் பார்த்துவிட்டு கண்ணின் மீது ஏன் குறை கூறுகிறாய்? அதைத்தான் பழுத்த கிழவராகிய திருநாவுக்கரசர் பேசுகிறார்: "கண்காள் ! காண்மின்களோ !” பார்க்கத்தான் நீங்கள் இருக்கிறீர்கள். இரட்டையாகப் படைக்கப்பட்டாலும் ஒரே பொருளைப் பார்க்கின் lர்களே! ஒரு பொருளை ஒரு கண்ணால் பார்த்தால் முழுப் பயனை அடைய முடியாது என்பதற்காக இரண்டு கண்களாலும் பார்ப்பதற்குப் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவ்வாறு இருக்க, ஐயோ பாவம்! ஏன் முடிக்கொள்ள வேண்டும்? நன்றாகப் பாருங்கள். எதனை? கேவலம் இன்றிருந்து நாளை அழிவதாய், நம்முடைய மனநிலையைக் கெடுத்து, அமைதியைக் குலைப்பதாய் உள்ள பொருள் களைக் காணாமல், அழகெலாம் திரண்டு ஒரு வடிவாக இருக்கின்ற பொருளைக் காண்பதுதான் நீங்கள் படைக்கப்பட்டதன் நோக்கமே தவிர, கேவலம் அழிகின்ற பொருளைப் பார்ப்பதற்கன்று. காண்மின்களோ என்று கூறினவர் எதனை என்ற வினாவுக்கு, கடல் நஞ்சுண்ட கண்டன்தன்னைக் கண்காள் காண்மின்களோ! என்று விடை கூறுகிறார். பார்ப்பதற்குரிய பொருள் இருக்கிறது. அதை விட்டுவிட்டுக் கண்டவற்றைப் பார்த்துவிட்டு ஏன் உன்னையே கெடுத்துக் கொள்கிறாய் என்று கண்னை நோக்கிச் சொல்கிறார். இந்த அடிப்படைதான், நம்மவர்கள் புலன் அடக்கத்திலே கண்ட பேருண்மை. புலன் அடக்கம் என்றால் கண்ணாகிய பொறியை மூடிவிடுவது என்ற கருத்தன்று கண்ணாகிய பொறியை வைத்துக்கொண்டு அறனறிந்து, பயனறிந்து, திறனறிந்து பயன்படுத்தல் வேண்டும் என்பதுதான் கருத்து. - இந்த அடிப்படையிலே பார்ப்போமேயானால், கம்பநாடன் புலன் அடக்கத்தை அழகாகப் பேசுகின்றான். எதிர்மறையாலும் உடன்பாட்டாலும் பேசுகிறான்.
பக்கம்:கம்பன் கலை.pdf/105
Appearance