பக்கம்:கம்பன் கலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபெரும் அவதாரங்கள் 3 ஒரு குறிப்பிட்ட காரியத்தை, ஏனையோரால் செய்யமுடியாத காரியத்தை ஒருவன் செய்துவிட்டான் என்றால் செய்த பிறகு அவனுடைய ஏனைய பண்பாடுகள் மறைந்து அகங்காரம் தலை தூக்கி நிற்பதைக் காண்கிறோம். கடவுளைத் தவிர வேறு யாராலும் வெல்ல முடியர்த கார்த்தவீரியார்ஜுனனைக் கொன்று விட்ட பிறகு பரசுராமனுடைய் அகங்காரம் எல்லை மீறி விட்டது என்பதை அறிகிறோம். ஆனால், இதோடு நின்றுவிட வில்லை. கார்த்தவீரியார்ஜுனனுடைய பிள்ளைகள் பரசுராமனை ஒன்றும் செய்யமுடியாத நிலையில், பழி தீர்க்க வேண்டுமென்ற ஒரே எண்ணத்தால் ஜமதக்னி முனிவருடைய தலையை வெட்டிவிட்டார்கள். தன் தந்தையைக் கொன்றவர்கள் கார்த்தவீரியனுடைய மக்கள் என்று தெரிந்தவுடன் அரசர்களுடைய குலத்தையே வேரறுக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்துவிடுகிறான் பரசுராமன். இருபத்தொரு தலைமுறைகள் எங்கெங்கே கூடித்திரிய அரசர்கள் இருக்கிறார்களோ அவர்களையும் அவர்களுடைய சந்ததியினரையும் வேரறக் களைந்து விடுகிறான். இந்த அளவில் இந்த வரலாற்றைப் பார்க்கும் போது மற்றொரு வரலாறு நினைவுக்கு வருகின்றது. கற்பில் மேம்பட்டவளாகிய கண்ணகி தன்னுடைய கணவன் பொய்யாகப் பழி சூட்டப்பட்டுக் கொல்லப் பட்டான் என்று அறிந்தவுடன் மிக ஆக்ரேர்ஷமாகச் சென்று வழக்காடுகிறாள். வழக்காடிய பிறகு, ஒன்றைச் சிந்திக்க வேண்டும். பாண்டியன் மனைவி தாழ்ந்து பணிந்து கேட்டுக் கொள்கிறாள். "பிழையை உணர்ந்து விட்டான் மன்னன், மன்னிக்க வேண்டும்” என்று. ஆனால், அப்போது கண்ணகி பேசுகின்ற பேச்சை நினைப்போமேயானால் மட்டார் சூழலார் பிறந்த பதிப்பிறந்தேன் பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/11&oldid=770618" இலிருந்து மீள்விக்கப்பட்டது