பக்கம்:கம்பன் கலை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 & கம்பன் கலை மக்களும் வாழவேண்டும்; அவர்கள் பொறி புலன்களோடும் வாழவேண்டும். அந்தப் பொறிபுலன்களோடு வாழ்வதிலே ஒர் எல்லைக்குட்பட்டு, வரம்புக்குட்பட்டு, கட்டுப்பட்டு வாழவேண்டும். அப்படி வாழ்ந்தால்தான், சரையு நதி பயன்படுவதுபோல, கோசல நாட்டு மக்களும் பயன்படுவார்கள். சரையு நதி இந்த எல்லைக்குக் கட்டுப்பட்டு இலக்கணம் தவறாமல் ஓடியதால் விளைந்த பயன் யாது? அந்தக் கோசல நாட்டைப் பொன் விளைந்த நாடாக ஆக்கிற்று. கோசல நாட்டிலே பொறி புலன்களைக் கட்டுப்படுத்தி மக்கள் வாழ்ந்ததனாலே என்ன பயனைப் பெற்றார்கள்? இராமனையே தங்களிடத்தில் பெறும் பேற்றைப் பெற்றார்கள். இதைவிட வேறென்ன வேண்டும்? நதி அந்த வரையறைக்குக் கட்டுப்பட்டுச் சென்றதாலே மக்களுக்கு நல்லுணவாயிற்று. மக்கள் கட்டுப்பட்டு வாழ்வு நடத்தியதால் உலகத்திற்கு நல்வழி காட்டுகின்ற ஒரு மகனைப் பெற்றெடுத்தார்கள். இவ்வளவு கருத்தையும் மனத்திலே வாங்கிக் கொண்ட புலவன், 'ஆசு அலம்புரி ஐம்பொறி வாளியும் காசு அலம்பு முலையவர் கண்னனும் பூசல் அம்பும் நெறியின் புறம்செலாக் கோச லம்புனை ஆற்று) அணி கூறுவாம்" என்று பாடுகிறான். ஐந்து பொறிகளிலும், கண்மட்டும் சென்று பற்றும் பொறி என்றும் ஏனைய நான்கும், நின்று பற்றும் பொறி என்றும் சொல்லுவார் சிவஞான முனிவர் கண் மிகவும் பொல்லாதது. சர்க்கரை எங்கோ இருக்கிறது என்றால் நாவுக்கு ஒன்றும் தொல்லையில்லை. ஆனால், கண் அப்படி யன்று, எங்கிருக்கும் பொருளையும் இது போய்ப் பற்றிக் கொண்டுவிடும் பற்றிக்கொண்டு, அது நம்மைப் படுத்துகிற பாடுதான் தெரிந்த விஷயமாயிற்றே! பொறிகளுள் இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/112&oldid=770621" இலிருந்து மீள்விக்கப்பட்டது