கம்பன் கண்ட புலன் அடக்கம் 103 கண்ணே மிகவும் முக்கியமான பொறியாகலின் 'ஆசு அலம்புரி ஐம்பொறி வாளியும் என்று ஐந்து பொறிகளாகிய அம்புகள் என்று தொடங்கினாலும் அவற்றுள் முக்கியமான ஒன்றைத் தனியே எடுத்துக் கூறத் தொடங்கிக் கண் எனும் பூசல் அம்பும் எனக் கூறினான். கண், சென்று பற்றும் பொறியாயினும்-இந்தக் கண் என்னும் பூசல் புரியும் அம்பு-கோசல மக்களிடத்தில் தன்னுடைய நெறியை விட்டு நீங்குவதில்லையாம். கண்ணினுடைய பயன் இருக்க வேண்டும்; ஆனால், தவறான வழியிலே செல்லக்கூடாது. கண்ணினுடைய பயன் இருத்தல் என்பது என்ன கருத்து? கை கமலம், வாய் கமலமாகிய ஒருவனைக் காணவேண்டும். கை கமலம் வாய் கமலமாய் உள்ள ஒருவனைக் காண்பதுதான் கண்ணுக்குரிய கடப்பாடு என்றால், தவறான வழியிலே செல்லாமல் அக் கண் இருத்தல் வேண்டும். புலன் அடக்கத்தை அடிப்படையிலே கொண்டதுதான் இந்தப் பெருங்காப்பியம் என்ற கருத்தை முதல் பாடலிலேயே வைத்துக் காட்டுகின்றான் கம்பநாடன். இவ்வாறு இல்லை எனில், ஆற்றைப் பற்றிப் பேசவந்தவன், மகளிருடைய கண்ணைப் பற்றியும் பொறி புலன்களைப்பற்றியும் ஏன் பேசவேண்டும்? எனவே, புலனடக்கமே இக்காப்பியத்தினுடைய அடிப்படை என்பது விளங்கும். - - இராமன் என்ற தசரதன் மைந்தன், மனிதனாகப் பிறந்தும் அந்தப் புலன் அடக்கத்தினாலே தேவனாக உயர்கின்றான். மற்றொருவன் இராவணன்), அதே புலனடக்கம் இன்மையினாலே புலத்தியன் மரபில் தேவனாகப் பிறந்தும் கீழே சென்று விடுகிறான். எல்லையற்ற தவங்களுக்கெல்லாம் உரியவனாக இருந்த ஒருவன்-ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்து அறிவு அமைந்தவனாக இருந்த ஒருவன்-இந்திரப் பெரும் பதத்துக்கு உரியவனாக இருந்த ஒருவன்-முக்கோடி
பக்கம்:கம்பன் கலை.pdf/113
Appearance