பக்கம்:கம்பன் கலை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட புலன் அடக்கம் ( 105 நிறை, கல்வி, அமைதி, அறிவு இத்தனையும் ஒன்றாகத் திரண்டல்லவா இந்த வடிவமாகி நிற்கின்றது. இஃது எப்படி இயன்றது? ஒரு குரங்கைப் பார்த்தவுடன் தோன்றும் மனோநிலை அன்று இது. ஆனால், அனுமன் என்ற குரங்கு வடிவின் உள்ளே இருக்கின்ற அந்த உள்ளுணர்ச்சிதான் தேஜஸ் என்று சொல்லப் படுகிறது; உள்ளொளி என்றும் சொல்லப்படும். உள்ளொளி முகத்திலே காட்சி அளிக்கின்றது. அதனைப் பார்த்தவர்கள் உடனே இந்த முடிவுக்கு வருகிறார்கள். இது என்ன குரங்கு வடிவா? ஆம்: வடிவம் குரங்குதான். ஆனால் அந்த வடிவத்தின் உள்ளேயிருக்கின்ற ஒப்பற்ற ஆற்றல், ஒப்பற்ற நிறை, கல்வி, அறிவு எல்லாம் வெளிப்படக் காரணமாக அடித்தளத்திலே இருப்பது எது? அதுவே அனுமனின் புலன் அடக்கம். ஏதோ பிரமசாரி என்று சொல்லுகின்ற வடிவம் அன்று இவனுடையது. மற்று இவன் வடிவு என்ன ? இவ் வுலகுக்கெல்லாம் அமைந்த ஆணியாம் வடிவம். இந்த உலகத்தின் அடிப்படையில் இருக்கின்ற அந்தப் புலன் அடக்கமே வடிவானான் அனுமன். அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற குறளின் இலக்கணத்தை அப்படியே வாங்குகின்றான் கம்பநாடன். அமரருள் அமரனாக ஒருவனை வைப்பதற்குக் காரணமாக அமைவது அடக்கம் அல்லவா? அந்த அடக்கத்தின் உறையுளாக இப்பொழுது திகழ்கின்றான் அனுமன். எனவே, இவனைப் பார்த்த வுடனேயே, இவ் வுலகுக்கெல்லாம் அமைந்த ஆணி இவன் என்று தெரிகிறது. - - உருள் பெரும் தேரைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்; பெருமிதம் கொள்ளுகின்றோம். ஆனால், அந்தப் பெருந் தேரைக் கொண்டு செலுத்துவது சிறிய கடையாணியன்றோ உருள் பெருந் தேர்க்குச் சிறிய அச்சாணி போன்றவர்கள் வடிவால் சிறியவர்களாக இருக்கலாம். ஆனால், தன்மையால் மலையினும் மானப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/115&oldid=770624" இலிருந்து மீள்விக்கப்பட்டது