106 கம்பன் கலை பெரியவர்களாக உள்ளனர். புலன் அடக்கம் செய்துள்ள காரணத்தால் அனுமன் மலையினும் பெரியவனாகக் காட்சி அளிக்கின்றான். புதியவர்களாகிய இராம இலக்குவர்கள், கண்டவுடனேயே அவனுடைய அந்த அடக்கத்தின் பெருமையை உணர முடிகிறதென்றால் அதன் பெருமையை எவ்வாறு கூறுவது? அடக்கம் அடக்கம் என்று நம்மவர்கள் சொல்லியது எதனை? பொறி புலன்களே இல்லாத வெறும் கற்பாறையா அனுமன்? அப்படியு மில்லை. பொறி புலன்கள் உண்டு அவனிடத்திலே, ஆனால் அவற்றை அடக்கி ஆள்கின்றான். அது எப்படித் தெரிகின்றது? நீ ஒப்பற்றவன் என்பதை நான் அறிவேன். ஆனாலும் நின்னுரு ஆணுரு; உன்னுடைய வடிவம், உன்னுடைய பொறி புலன்கள் ஆண் மகனுக்குரியவை என்பதை நான் அறிவேன்' என்று பின்னர் சீதை சொல்லுகிறாள் அல்லவா? புலன்களை அடக்கி நீ அவற்றின் மேல் ஆட்சி செலுத்துகின்றாய் என்பது உண்மைதான். என்றாலும், ஆண் என்று கூறுகின்ற உன்னைத் தீண்டவும் ஒல்லுமோ? என்று பேசுகிறாளே, அப்பொழுதுதான் அனுமன் வெறும் பாறாங்கல்லோ, மரமோ அன்று, பொறி புலன்களுடன் கூடிய மானிடத்தன்மை பெற்றவன் என்பதை அறிகின்றோம். அனுமன் மானிடத்தன்மை பெற்றவன் என்பதை சீதையின் கூற்றாகவும், மானிடத் தன்மையை வென்று, தேவத் தன்மையிலே வாழுகின்றவன் என்பதை இராமன் கூற்றாகவும் வைத்துக் காட்டுகிறான் கவிச் சக்கரவர்த்தி. இராமன் அனுமனைப் பார்க்கும்பொழுது புலனடக்கத்தின் எல்லையிலே நிற்கின்ற ஒருவனாகக் காட்சி தருகிறான் சொல்லின் செல்வன். யார் கொல் இச்சொல்லின் செல்வன் என்று இராமன் கேட்கும் பொழுது, சொல்லின் செல்வனாக மட்டும் அவன் அவனைக் கருதவில்லை. அடக்கத்தின் திருவுருவாகவும், தேவர்களுள் வைத்து
பக்கம்:கம்பன் கலை.pdf/116
Appearance