பக்கம்:கம்பன் கலை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட புலன் அடக்கம் 109 இன்று முதல் பொறி புலன்களை அடக்கப் போகின்றேன் என்று ஆரம்பித்தால், அஃது அவ்வளவு எளிதாக இயலுவதன்று. அல்லாமலும் புலன் அடக்கம் செய்யப் போகின்ற நிலையிலே, அப்பொறி புலன்கட்குப் பற்றுக் கோடாக உள்ள உலகப் பொருள்களை வைத்துக்கொண்டு புலன் அடக்கம் செய்தல் என்பது மிகவும் கடினமான காரியம் குடும்பத்தையும் சுக வாழ்வையும் நீக்கிக் காட்டில் வாழ்ந்த இலக்குவனுடைய அடக்கத்தைப் பெரிதாகப் பாராட்ட முடியாது. அனுபவப் பொருள் இல்லாத பொழுது புலன் அடக்கத்தில் என்ன புதுமை? ஆனால், பரதனுடைய புலன் அடக்கம் தனிச் சிறப்பு வாய்ந்தது. ஏன்? மனைவியோடு அரண்மனையில் வாழ்ந்தும் புலன் அடக்கம் செய்கின்ற சிறப்பு எல்லையில்லாத பெருமையுடையது. இல்லாத பொருளிடத்துத் தனக்குப் பற்றில்லை என்று ஒருவன் கூறுவதில் பெருமை இல்லை. "வறுமை என்ற சொல்லுக்குப் பொருள் எழுத வந்த பேராசிரியர் செல்வம் துய்க்கப் பெறாத பற்றுள்ளம் என்று கூறினார். வறுமை என்பதற்குச் செல்வம் இன்மை என்று பொருள் கூறினால் தவறு நேர்ந்துவிடும். செல்வம் இல்லாதவன் இருக்கின்றானே அவன் வறியவன் அல்லன். அப்படியானால், உலகத்திலே ஒன்றும் வேண்டா என்று துறந்து போகின்றவனை வறியவன் என்று சொல்ல முடியுமா? அவன் வறுமை உடையவனாக இல்லை. ஆனால், பொருள் இல்லாத இடத்து ஓயாது அது இருந்தால் நலம் என்ற பற்றுள்ளம் கொண்டவன்தான் வறியவன். உலகப் பொருள்களை வைத்துக்கொண்டே புலனடக்கம் செய்கின்றேன் என்று சொல்கிறார் ஒருவர். உங்களுக்கு வேண்டியது துறவுதானே? நான் வீட்டிலேயே இருக்கிறேன். இருந்துகொண்டே புலனடக்கம் செய்கிறேன். நீங்கள் எதற்கு என்னைத் துறந்து போ என்று சொல்கிறீர்கள் என்று கேட்கிறான் ஒரு சீடன். அப்பா, அதில் ஒரே ஒரு சின்னத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/119&oldid=770628" இலிருந்து மீள்விக்கப்பட்டது