பக்கம்:கம்பன் கலை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 ) கம்பன் கலை அவனுடைய மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்தும் இராம பக்தியிலே ஈடுபட்ட காரணத்தால்தான் பொறி புலன்களை அடக்க முடிந்தது. அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணனாக இருந்தான். ஆகையால், அந்தக் கண்ணினால் எதையும் பார்க்க இயலாது; வாய் இராமனுடைய பெயரையே சொல்லிக்கொண்டிருந்தது. ஆகலின், அந்த வாயில் வேறு அவச் சொல் எவ்வாறு வரமுடியும்? இராமனுடைய புகழை ஓயாது காது கேட்டுக்கொண் டிருந்தது. ஆகலின், அந்தக் காதில் வேறு அவச் சொல்லை எவ்வாறு கேட்கமுடியும்? - இது கருதித்தான், "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு" என்ற குறளும் தோன்றிற்று. இவ்வாறு அந்தப் பொறி புலன்களுக்கு ஒப்பற்ற ஒரு திருப்பம் கொடுக்கையில்தான் கம்பனுடைய அறிவு நுணுக்கத்தையும் காண்கின்றோம். ஆகவே, புலனடக்கம் வேண்டும் என்பதுடன் அந்தப் புலனடக்கத்தை எவ்வாறு செய்தல் வேண்டும் என்பதையும், அழக்காக, குறிப்பாக வைத்துக் காட்டுகிறான். - இத்தகைய பரதனுக்கும் ஒரு சமயத்தில் புலனடக்கம் செய்ய இயலாமல் போய்விடுகின்றது. அதை நினைத்துப் பார்க்கின்றோம். பொறி புலன்களை எல்லாம் அவித்து வாழ்கின்றவனாகிய பரதன் தாயைக் கொலை செய்வேன் என்று பேசுகிறான். அப்படிக் கண் மூடிக் கண் திறப்பதற்குள் உன்னைப் பொடி சூர்ணம் ஆக்கி விடுவேன். தாயெனும் பெயர் எனைத் தடுக்கமுடியாது என்ற கருத்தில், "ஏ எனும் மாத்திரத்து எற்று கின்றிலேன் தாய் எனும் பெயர் எனைத் தடுக்க லாவதோ ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/122&oldid=770632" இலிருந்து மீள்விக்கப்பட்டது