பக்கம்:கம்பன் கலை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கம்பன் கலை இவ்வகையான வினாக்களுக்கும் விடைகாண வேண்டிய சூழ்நிலையில் இப்பாத்திரத்தைக் கவிஞன் படைத்து விட்டமையின் ஏனைய பாத்திரங்கள் போலல்லாமல் வாலி தனித்து விளங்குகிறான். காப்பியத் தலைவனாகிய இராமனை வாலி ஏசுகின்ற ஏச்சுக்கு அளவே இல்லை. அளவாலும் தரத்தாலும் அவை வலிமையான வினாக் கணைகள் என்பதை அவற்றை ஒரு முறை படிப்பாரும் உணராமல் இருக்க முடியாது. இறுதி வரை இராமனோ அன்றி நாமோ விடை கூற முடியாத வினாக்கள் பலவற்றைத் தொடுக்குமாறு செய்கிறான் கவிஞன். அவ்வாறு ஏசிய பிறகு திடீரென்று வாலி மனம் மாறி இராமனை நோக்கித் தீயன பொறுத்தி என்றான்சிறியன சிந்தியா தான் (125 என்று வாலி கூறுவதாகப் பாடல் செல்கிறது. இத்துணைத் துாரம் இராமனை ஏசிய ஒருவனைச் சிறியன சிந்தியாதான் என்று கவிஞன் கூறுவது வியப்புத்தான்! இன்று ஆயிரக்கணக்கான பேர்களால் வாலி வரலாறு பேசப் பெறுகின்றது. ஆனால் யாரும் வாலியின் இந்த மாற்றத்திற்குக் காரணத்தை ஆய்ந்து அமைதி தரும் விடை கூறினதாகத் தெரியவில்லை. முன்வாலி, இட்ைவாலி, பின்வாலி என்று பிரித்துக் கூறுகிறார்களேனும் இம்மூன்று மனமாற்றம் வாலியின்பால் ஏன் எவ்வாறு உண்டாயிற்று எனக் கூறவில்லை. அன்றியும் 'வாலிவதம் என்றும், வாலி மோட்சம் என்றும் இரு வேறு கருத்துக்கள் பரவலாகப் பேசப்படுகின்றன. வாலிவதம் என்பார் அவன் ஒரம்பினால் உயிர் விட்டதைக்கூட மறந்து ஏதோ பல நாள் அவன் வதைக்கப்பட்டது போலக் கருதிக்கொண்டு இப்பெயர் சூட்டுகின்றனர். இவ்வாறு கூறும் பொழுது வதைக்கப்பட வேண்டிய அளவு அவன் பெருங்குற்றம் இழைத்தான் போலும் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/129&oldid=770639" இலிருந்து மீள்விக்கப்பட்டது