பக்கம்:கம்பன் கலை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாலி-ஒரு புதிய கண்ணோட்டம் 119 வாலிமோட்சம் என்பார் கூற்றில், பரம்பொருள் கையால் இறக்கும் பேறு பெற்றவன் என்பது குறிப்பாகத் தொனிக்கிறது. வாலியின் சாவு வதமானாலும், மோட்ச மானாலும் கம்பநாடன் காட்டிய முறையில் ஒரு புதிர் இருக்கத்தான் செய்கிறது. இப்புதிரை அவிழ்க்க முடியுமா என்ற முயற்சியே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும். கம்பநாடன் கூற்றை ஆதாரமாகக் கொண்டே இவ்வாராய்ச்சி நடைபெற வேண்டும். கவிஞன் பாடலை யொட்டி இந்நிகழ்ச்சி நடைபெறும் முறையைக் காணலாம்: இராமனிடம் நட்புப் பூண்டான் சுக்கிரீவன். அவன் மனைவியை இழந்தவன் என்று அறிந்தவுடன் இராமன் 'உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டி, தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவன் புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு, நட்பு-72) என்று கூறிவிட்டான். இவ்வாறு கூறும் பொழுது வாலியின் இயல்பை இராமன் அறியவில்லை என்று கூற முடியாது. இதற்கு முன்னரே மாருதியாகிய சொல்லின் செல்வன் வாலியைப் பற்றி 13 பாடல்களில் விவரமாகக் கூறிவிட்டான். இவ்வியல்புகள் பின்னர் விரிவாக ஆராயப்படும். இங்ங்னம் கூறும் பொழுதே பொருதற்கு எதிர்ப்பட்டவர் யாவராயினும் அவருடைய வலியிற் பாதி வாலிக்குச் சென்றுவிடும் என்ற தனிச் சிறப்பையும் அனுமன் கூறிவிட்டான். * "கிட்டுவார் பொரக் கிடைக்கின், அன்னவர் பட்ட நல்வலம் பாகம் எய்துவான் எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/130&oldid=770641" இலிருந்து மீள்விக்கப்பட்டது