பக்கம்:கம்பன் கலை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ) கம்பன் கலை இரண்டு எழுத்துகளாலாகிய ஒரு பெயர்தான் அதில் } காணப்பெற்றது. ஆனால், அப்பெயரை வாலி கண்ட விதத்தைக் கவிஞன் மிக நுணுக்கமாக விளக்குகிறான்: 'இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை 'இராமன்' என்னும் செம்மைசேர் நாமந் தன்னைக் கண்களில்-தெரியக்கண்டான்' (77) இப்பாடலில் வரும் செம்மைசேர் நாமம்' 'கண்களில், தெரியக் கண்டான்' என்ற சொற்களை ஆழ்ந்து சிந்திக்க ; வேண்டும். செம்மைசேர் நாமம் என்பது தன்னை நம்பியவர்களைச் செம்மையில் சேர்ப்பிக்கும் நாமம் என்ற ஆழமான பொருளையுடையது. எனவே, அது வீடு நல்கும், மந்திரம் என்ற் கருத்தைக் கவிஞன் மறைமுகமாகச் கூறிவிட்டான். இனிக் கண்டான் என்று கூறி இருந்தாலே, போதுமானது. காண்டல் கண்ணின் செயல் என்பதை, யாவரும் அறிவர். அவ்வாறு இருக்கக் கண்களில், கண்டான்' என்பது வேண்ட்ா கூறியதாகும். இதனுடன் நில்லாம்ல் கண்களில் தெரியக் கண்டான் என்பது மேலும், ஒருபடி செல்வதாகும். கம்பனா இவ்வாறு தேவையற்ற இரு, வார்த்தைகளைப் பெய்து பாடுகிறான்? ஆம்! மிக ; ஆழமானதும், பரம மறைபொருளானதுமாகிய ஒரு ; கருத்தைத் தனக்கே உரிய முறையில், இரண்டு சொற்களைத் தேவை இல்லாமல் பெய்வதன் மூலம் கூறிவிடுகிறான். கருத்தளவால் மட்டுமே காணக்கூடிய மந்திரத்தைச் ; கண்களாலும் காணும் பேறு பெற்றவன் வாலி என்பதையும், ஏனையோர் போல ஊனக் கண்ணால் மட்டும் கண்டான் போலும் என்று நினைந்துவிட வேண்டா என்பதையும், அதன் சிறப்பை உடன் அறிந்து கொண்டான் என்பதையும், ‘தெரிய' என்ற சொல்லால் விளக்குகிறான் கவிஞன். இதனைக் காணுமுன்பே 'மூவர்க்கும் முதல்வன் நினைவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/133&oldid=770644" இலிருந்து மீள்விக்கப்பட்டது