பக்கம்:கம்பன் கலை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 () கம்பன் 565)6] எனவேதான் இராமன் அவன் எதிரில் தோன்றுகிறான். இராமனை எதிரே கண்டவுடன் வாலியின் அகமனத்தில் து.ாய அறிவும் ஞானமும் தோன்றுகின்றன. புறமனத்தில் இராமன் என்ற தசரதன் புதல்வனின் செயல் சினத்தை உண்டாக்குகிறது. எதிரே நிற்பவன் சாதாரண மனிதன் அல்லன் என்று கூறுகிறது அகமனம். எதிரே நிற்கும் இராமனை வாலி கண்களில் தெரியக் காண்கிறான். -புறக்கண்களில் மட்டும் காணும்பொழுது எதிரே தசரதகுமாரன் என்ற மனிதன், பரதனின் முன் தோன்றியவன் நிற்கின்றான். இக்காட்சி உடன் மறைகிறது. அடுத்து நீலக் கார்முகில் கமலம் பூத்து, மண்ணுற்று வரிவில் ஏந்தி வருவதே போலும் மாலை'யான ஒரு காட்சி தோன்றுகிறது. கண்களினால் மட்டும் கண்டபோது தசரத குமாரனும், கண்களில் தெரியக் கண்டபோது கார்முகில் கமலம் பூத்து நிற்கும் காட்சியும் தோன்றுகின்றன. இவ்விரு காட்சிகளும் மாறி மாறி வருவதால் குழம்புகிறான் வாலி. இக்குழப்பம் காரணமாக அவனுடைய மனத்தில் ஒரு பெரும் போராட்டம் நிகழ்கிறது. புறமனத்தில் தோன்றும் இகழ்ச்சி காரணமாக இராமனைப் பலவாறாக ஏசுகிறான்: "வீரம் அன்று, விதி அன்று; மெய்ம்மையின் - வாரம் அன்று, நின் மண்ணினுக்கு என் உடல் பாரம் அன்று பகை, அன்று; பண்பு அழிந்து ஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ? (90) என்று கூறும்பொழுது அவன் மனப்போராட்டம் உச்ச கட்டத்தை அடைகிறது. பகை இல்லாத ஒருவன் பண்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/135&oldid=770646" இலிருந்து மீள்விக்கப்பட்டது