வாலி-ஒரு புதிய கண்ணோட்டம் 131 ஆவ நீ ஆவது என்று அறிவினோர் அருளினார் (129) யாவரும் எவையுமாக உள்ளவன் ஒருவனே என்ற விளக்கம் தோன்றிய பிறகு கொல்வான் கொல்லப்பட்டவன் என்ற இரண்டை நினைப்பது அறிவுடைமையாகாது. பூவும் அதன் மணமும் போல் ஒன்றே இரண்டாய் விளங்கும் சிறப்பினை அறிவதே இவ்வறிவு விளக்கமாகும். விளக்கம் பெறாத பொழுது தம்பி பகைவனாகவும், அவனுக்கு ஏற்றுக் கொண்டு தன்மேல் அம்பு எய்த இராமன் பண்பற்றவ னாகவும், தவறிழைத்துச் சூரிய குலத்தை இழிவு படுத்தியவனாகவும் வாலியின் அறிவுக்குட்பட்டது. விளக்கம் பெற்றுவிட்ட பிறகு பகை-நட்பு போன்ற இருமையைக் கடந்து நிற்கும் ஒன்றை 'முற்றும் நீ" என்கிறான். இவ்வொரு சொல்லில் அனைத்தும் அடங்கிவிடுகின்றன. ஒருவேளை இதில் விடுபட்டது ஏதேனும் இருக்குமோ என்ற ஐயம் தோன்றுதல் முறைதான். தவறு, பாவம், நேர்மை இன்மை, குற்றம் முதலியவற்றை இப்பொருளினிடத்துச் சேர்க்க முடியுமா என்ற ஐயம் உடையார்க்கு விடை கூறுபவன் போல அந்த ஸ்திதப் பிரஞ்ஞன் மற்றும் நீ என்று கூறிவிடுகிறான். இன்னும் ஒரு படி மேற்சென்று நன்கு விளங்கும் முறையில் பாவம்-தருமம், பகை-உறவு அனைத்தும் நீயே என்று விளக்கமாகவும் கூறுகிறான். பாவமும் தருமமும் ஒன்றாக முடியுமா? பகையும் உறவும் ஒன்றாக முடியுமா? இருளும் ஒளியும் ஒன்றாக முடியுமா? யாருக்கு இவை ஒன்றாகி விட்டனவோ அவனே அகமன விளக்கம் பெற்றவன். வாலிக்கு இவ்விளக்கம் வந்தமையால்தான் இவ்வாறு கூறுகின்றான். அந்த விளக்கம் பெற்ற அவன் அகமனம் பகை உணர்ச்சி, காழ்ப்பு உணர்ச்சி, விருப்பு, வெறுப்பு ஆகிய எதுவும் இல்லாமல் நிர்மலமாக உள்ளது. எனவே
பக்கம்:கம்பன் கலை.pdf/142
Appearance