பக்கம்:கம்பன் கலை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கம்பன் கலை இத்தகைய செயல்களில் இறங்க வேண்டும் என்பது சாதாரண அரசியல் அறிவு பெற்ற ஒவ்வொருவனும் அறிந்ததேயாகும். எனவே, இராகவன் தன் தோழர்களாகிய சுக்கிரீவன், நீலன், சாம்பன் என்பவர்களை நோக்கி, அவர்கள் கருத்தை அறியும் விருப்புடையவனாகி இப்பொருள் கேட்டநீர் இயம்புவீர் இவன் கைப்புகற் பாலனோ கழியற் பாலனோ ஒப்புற நோக்கி நும் உணர்வினால் உரையுங்கள் என்று கேட்கிறான். மிக அழகிய முறையில் வினாவை நன்கு விளங்கும் வண்ணம் கேட்கிறான் இராமன். வந்தவனைப் பற்றிய வரலாற்றை ஒற்றர்களாகிய துமிந்தனும் மயிந்தனும் இவ்வனைவர் எதிரேதான் கூறினார்கள். அனைத்தையும் கேட்ட சுக்கிரீவன் முதலானோரைப் பார்த்து இராமன், "வீடணன் அடைக்கலம் தருதற்கு உரியவனா? அன்றி விரட்டுதற்கு உரியவனா? நடுநிலையில் நின்று ஆராய்ந்து கூறுங்கள்" என்கின்றான். இனி ஒவ்வொருவரும் தத்தம் கருத்தை விரிவாக எடுத்துக் கூறுகின்றனர். ஒத்த மதிப்புடைய அரசன் என்ற முறையில் முதலில் சுக்கிரீவன் பேசுகிறான். பதினான்கு பாடல்களில் அவனுடைய வாதம் நடைபெறுகிறது. அவன் எடுத்துக் கூறும் காரணங்கள் பலவற்றுள் சிலவற்றைக் காணலாம்: தனது அண்ணனை இவ்வாபத்துக் காலத்தில் துறந்தது நீதியா? செம்மையற்ற அரக்கரில் யார் நல்லவர் இருக்க இயலும்? அண்ணனின் அறவழி தவறி நடக்கிறான் என்று இவன் கருதினால் அவனை விட்டு நீங்கி விடுதல் சரியே. ஆனால், அண்ணனின் பகைவராகிய நம்மிடம் வருதல் பழியல்லவா? அண்ணன் நன்கு வாழும் நாட்களில் அவனுடன் இருந்து, அவனுக்கு எதிராகப் போர் மூண்ட நாளில் நம்மிடம் வரும் இவன் நமக்கு மட்டும் எவ்வாறு உறவாய் இருத்தல்கூடும்? அரக்கர் குலத்தைக் கருவறுக்கக் கடமை பூண்டுள்ள நாம் அவ்வரக்கருள் ஒருவனைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/149&oldid=770661" இலிருந்து மீள்விக்கப்பட்டது