பக்கம்:கம்பன் கலை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபெரும் அவதாரங்கள் 7 யாராலும் முடியாது. ஆகவே பரம்பொருள் ஒன்றுதான் இவர்களுடைய அகங்காரத்தைப் போக்க முடியும். இந்த அகங்காரம் கொண்ட நால்வர்களையும் அழிப்பதற்கு ஆண்டவன் நேரே வருகிறான். சூரபன்மனுடைய அகங்காரத்தைப் போக்க முருகன் வருகிறான். இரணியனுடைய அகங்காரத்தையும் இராவணனுடைய அகங்காரத்தையும் பரசுராமனுடைய அகங்காரத்தையும் போக்க திருமால் நேரிடையாக வருகின்றார். ஆகவே இராமாவதாரம் என்பது முழுத்தன்மை பெற்றதாய், சிதப்பிரக்ஞன் என்று சொல்கிறதே. கீதை, அதுபோல் முழுப் பண்பாட்டின் வடிவமாய் அகங்காரம் என்பது எள்ளளவும் இல்லாத ஒரு அவதாரம். அவனுடைய பிறப்பு வளர்ப்பைப் பற்றிக் கம்பன் சொல்லிக் கொண்டு வரும்போது, எவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கின்ற சக்ரவர்த்தித் திருக்குமாரனாகிய அவன் தெருவில் நடந்து போகும்போதும்கூட சாதாரண மக்களைப் பார்த்து, "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நன்றாக இருக்கிறீர்களா? உங்கள் குழந்தை குட்டிகள் நன்றாக இருக்கின்றார்களா?" என்று கேட்கின்ற அளவுக்கு செளலப்யம் என்று சொல்வார்கள்-எளிவந்த தன்மை உடையவனாக இருக்கின்றான். - “நடையில் நின்றுயர் நாயகன்" என்று சொல்வான் கவிச்சக்கரவர்த்தி கம்பன். மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவன் இராமன். ஆகவேதான், வேறுள.... குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா' என்று சுக்கிரீவன் பேசுகின்ற அளவுக்கு மனிதனுடைய பண்பாட்டின் சிகரத்தை அடைந்தவனாக இராமன் இருக்கின்றான். ஆகவே இந்த இராமன், அகங்காரம் என்பது அழிக்கப்பட வேண்டுமென்று சொல்வதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/15&oldid=770662" இலிருந்து மீள்விக்கப்பட்டது