பக்கம்:கம்பன் கலை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கம்பன் கலை மனநிலை அறியாமல் உள் விடுவது தவறு என்பது. இம்மூவரில் ஒருவரும் அடைக்கலம்' என்று வீடணன் கூவிக்கொண்டு வந்ததைப் பற்றிக் (53 (71) ఢ} கொள்ளவில்லை. சிறப்பாகச் சுக்கிரீவன் அடைக்கலம்' என்ற சொல்லைக் கூடப் பயன்படுத்தவில்லை அவன் வாதம் முழுவதிலும். இதுவரை ஒருவராவது அவனைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறவில்லை என்பதும் மறக்கக் கூடாது. இராமன் கேட்ட வினாவை மீண்டும் ஒருமுறை நினைந்து பார்த்தல் வேண்டும். இவனுக்கு அடைக்கலம் தரலாமா? என்று கேட்டானே தவிர, 'இவனைச் சேர்த்துக் கொள்வதால் நமக்குப் பயன் உண்டா? என்று கேட்கவில்லை. வீடணனைச் சேர்த்துக் கொள்வதால் தனக்கு ஒரு பெரிய் உதவி கிடைக்கும் என்று இராமன் கருதினானா என்றுகூட நமக்குத் தெரியாது. அப்படி இருக்கவும் சுக்கிரீவன் இரக்கமில் அவரையே துணைக்கொடு) ஏற்லால், சுருக்கமுண்டு) அவர் வலிக்கு என்று தோன்றுமால் என்று கூறக் காரணம் என்னை? இராகவன் கூறிய அடைக்கலம் என்ற சொல்லை. ஒருமுறைகூடக் கூறாத சுக்கிரீவன். இங்ங்னம் இராமன் கூறாத ஒன்றை இட்டுக் கட்டிக் கூறக் காரணம் என்ன? வாய்விட்டுக் கூறாவிட்டாலும், அடைக்கலம் என்று சொல்லில் மட்டுமே இராகவன் பயன்படுத்தினாலும் அவன் அகமனத்தில் கிடக்கும் எண்ணத்தைச் சுக்கிரீவன் நன்கு அறிந்து கொண்டான் என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. மேலும், இராகவன் வெற்றிக்கு நான் ஒருவனே துணை செய்தேன்’ என்ற பெருமையை அடையவேண்டும் என்று சுக்கிரீவன் நினைக்கிறான். அந்நிலையில் அப்பெருமையில் பங்கு போட ஒருவன் வருவதை அவன் விரும்பவில்லை என்பதும் அறியவேண்டும். அங்ங்னம் அவன் நினைப்பதில் தவறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/151&oldid=770664" இலிருந்து மீள்விக்கப்பட்டது