பக்கம்:கம்பன் கலை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கம்பன்-வழக்கறிஞன் 143 அன்று! அன்று! வேறு ஏதோ ஒரு காரணமும் இருத்தல் வேண்டும். சுக்கிரீவன் கூறியதன் உட்கருத்து எதுவாக இருக்கும் என்பதை முன்னர்க் கண்டோம். அதேபோல அனுமனும் ஒரு கருத்தைக் கொண்டுள்ளான். சுக்கிரீவன் வீடணன் வேண்டா என்ற தன் முடிபுக்கு அரன் தேடினான். ஆனால், அனுமன் அவன் வேண்டும் என்பதற்கு அரண் தேடுகிறான். வந்த வீடணன் அண்ணனுடைய அரசின் மேல் காதல்கொண்டு வந்துள்ளான் என்ற கருத்தை முதன்முதல் தெரிவிப்பவன் இவ்வனுமனே யாவன். இது பற்றி ஒருவரும் நினைக்கக்கூட இல்லை. அவ்வாறு இருக்க அனுமன் இப்புதுக் கரடியை இங்கு விடுவதன் கருத்து என்னவாக இருத்தல் கூடும்? எடுத்துக் கொண்ட கேள்வி என்ன? அதற்கும், வந்தவன் அரசின் மேல் பற்றுக்கொண்டு தான், அதற்கேற்ற சமயம் பார்த்து வந்திருக்கிறான் என்று கூறுவதற்கும் என்ன. பொருத்தம் உளது? இங்கேதான் கம்பனின் வழக்குரைக்கும் திறம் நன்கு வெளிப்படுகிறது. சுக்கிரீவன் முதலிய மூவருக்கும் உள்ள ஒத்த கருத்து, வீடணனைச் சேர்த்துக் கொள்ளலாகாது என்பதே. இதை அறிந்த அனுமன் திடீரென்று அவர்கட்கு விரோதமாக ஒன்றுங்கூற முடியாது. மேலும் இராமனுடைய கருத்து என்ன என்பதையும் இன்னும் நன்கு உணர முடியவில்லை. இந்நிலையில் ஒரு வழக்கறிஞன் என்ன செய்வான்? நேரடியாகத் தன் கருத்து இன்னது என்று கூறாமல் வேறு பொருள்களைப்பற்றிக் கூறுகிறான். மேலும், வீடணன் வரவு தங்களுக்குத் தீங்கு விளைக்குமா என்று இராமன் ஐயங்கொள்ளமாட்டான். சுத்தவீரனாகலின், மக்கள் மனநிலையை நன்குணர்ந்தவனாகவானும்,நல்லார் யாண்டும் பிறப்பர் என்ற பேருண்மையை நன்குணர்ந்த வனாகலானும், இராமன் வீடணனைப் பற்றிச் 'செம்மையில் அரக்கரில் யாவர் சீரியோர் என்ற சுக்கிரீவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/154&oldid=770667" இலிருந்து மீள்விக்கப்பட்டது