பக்கம்:கம்பன் கலை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 & கம்பன் கலை வாதத்தை நம்பமாட்டான். எனவே, இராமனை மனமாற்றம் அடையச் செய்வது ஒன்றிருக்குமாயின் அது வீடணன் வந்தடைந்த காலமே யாகுமல்லவா ? அதைப்பற்றியே அனுமன் பலபடப் பன்னிப் பன்னிப் பேசுகிறான். இனி மறுபடியும் அனுமன் வாதம் மாறுதல் அடைகிறது. அதிகம் பேசுபவன் அவனேயாகிலும் அவன் வாதங்கள் மாறிக் கொண்டே செல்கின்றன. நான்கு பாடல்களில் வீடணன் தனக்கு உதவி செய்ததைக் குறிக்கிறான். இதனால் வீடணனிடத்து இரக்கம் தோன்றச் செய்வதே அனுமனின் கருத்தாகும். இதன் இறுதியில் 'சீதைக்கு உயிர் நிலைத்து இன்னும் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் வீடணன் மகள் திரிசடைதான் என்பதையும் குறிக்கிறான். இதனால் இராமன் மனம் முற்றும் வீடணன்பால் திரும்பி இருக்கும் என்பதை நினைந்தான் அனுமன். இதனால் இனி அவன் பேசப்போகும். பேச்சுக்கள் முன்னர்ப் பேசியவற்றோடு மாறுபடுதலைக் காணலாம். தான் இதுவரை கூறியதை அனுமன் சேர்த்து முடிவு கூறுகிறான். வீடணனை அயிர்த்து அகலவிடுதியாயின் கூவத்தின் சிறுபுனலைக் கடல் அயிர்த்தது ஆகாதோ என்றும், பகைப்புலத்தோர் துணையல்லன் என்றிவனைப் பற்றேமேல், அறிஞர் பார்க்கின், நகைப் புலத்ததாம் அன்றோ?' என்றும் கூறும் இவன்தானோ அனுமன் என்று ஐயுறுகிறோம். ஆம்! சிறந்த வழக்கறிஞன் போலப் பேசுகிறான் அனுமன் சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து' என்ற பொய்யா மொழியைப் பொய்யாத மொழி ஆக்குகிறான் அனுமன் வாயிலாகக் &Ls) L/6&T. இவை அனைத்தினும் பிறகுதான் இராகவன் வாய் திறந்து பேசுகிறான்; அறிஞர்க்கெல்லாம் சிறந்த அறிஞனான இராகவன் பேசுகிறான். ஆதியிலிருந்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/155&oldid=770668" இலிருந்து மீள்விக்கப்பட்டது