பக்கம்:கம்பன் கலை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கம்பன்-வழக்கறிஞன் 145 இராகவன் நிலை இக்கட்டாக இருக்கிறது. ஒருவர்பின் ஒருவராக அவன் விரும்பாத முடிபுக்குக் கட்டடம் கட்டுகின்றனர். ஒவ்வொருவருடைய ஒவ்வொரு பேச்சும் அக்கட்டடம் பலப்பட வைக்கும் ஒவ்வொரு கல் போன்று உளது. இந்நிலையை நீடிக்க விடுவதாலோ மீண்டும் அவர்கள் கருத்தை அறிய முற்படுவதாலோ பயனில்லை. என்ன செய்வது என்று அறியாமல் இராமன் அனுமனை நோக்குகிறான். அவர்களில் ஒருவராவது, அடைக்கல மாவது! வீடணனுக்காவது கொடுப்பதாவது! பைத்தியக் காரத்தனமல்லவா? என்று கூறி இருப்பார்களாயின், இராகவன் மகிழ்வு உற்றிருப்பான். ஆனால், துரதிருஷ்ட வசமாக அவர்கள் ஒருவரும் அவ்வாறு கூறவில்லை. கூறாதது மட்டுமன்று. அடைக்கலம் என்ற சொல்லைக்கூட அல்லவா அந்தச் சுக்கிரீவனும் நீலனும் கூற மறுத்துவிட்டனர். மாருதி ஒருவனே துணை என்று நம்பி நிற்கும் இராமன் மனங்குளிர அனுமன் பேசிவிட்டான். சொல்லின் செல்வன், சொல்லின் செல்வனாகவே பேசிவிட்டான். என்றாலும் இராமன் குறை முற்றிலும் நீங்க வில்லை. அடைக்கலம், கையடை என்ற சொற்களில் ஒன்றுகூட அந்தப் பொல்லாத அனுமன் பயன்படுத்தாதது விந்தையே! இதற்காக விட்டுக்கொடுப்பதும் தவறு. என்ன செய்கிறான் அவ்வறிஞன் மாருதி சொற்களைக் கேட்டவுடன் அமிழ்து உண்டவனைப் போல மகிழ்ந்தானாம். 'மாருதி வினைய வார்த்தை செவிமடுத்து) அமிழ்தின் மிாந்திப் பேர்அறிவாள நன்று நன்றெனந் பிறரை நோக்கிச் சீரிது மேல்இம் மாற்றம் தெளிவுறத் தேர்மின் என்னா' (வீடணன் அடைக்கலப் படலம், 106) 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/156&oldid=770669" இலிருந்து மீள்விக்கப்பட்டது