பக்கம்:கம்பன் கலை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கம்பன்-வழக்கறிஞன் 147 வழக்கறிஞனாகிய இராகவன் முடிக்குந்திறம் அறிந்து பாராட்டற்குரியது. - 'காரியம் ஆக அன்றே ஆகுக கருணை யோர்க்குச் சீரிய தன்மை நோக்கின் இதனின் மேற்சிறந்தது) . உண்டோ ?" என்று கூறினான் அறிஞன். முதலிலிருந்து கவிதைகளைப் படித்துக் கொண்டு வந்தால் இராகவனுடைய அறிவுத்திறன் நன்கு விளங்கும். வாரன் ஹேஸ்டிங்ஸின் குற்றவிசாரணை என்ற அழகிய கட்டுரையில், வாரன் ஹேஸ்டிங்ஸைக் குற்றஞ் சாட்டிய பர்க் என்ற அறிஞர் வழக்கை முடித்த விதத்தை மெக்காலே என்ற பெரியார் எழுதியுள்ளார். அவ்வழக்கறிஞர் முடித்தவுடன் பெண்க்ள் மயக்கம் உற்று விழுந்தனராம். அதுபோன்ற ஓர் இடமாகும் இது. ஆனால், இக்கவிதையோடு நிறுத்தியிருந்தால் கம்ப நாடனை பர்க்' என்ற அறிஞரோடு ஒப்பிடத்தான் கூடுமே தவிர, அவரைவிட உயர்ந்த வழக்கறிஞன் என்று கூறல் இயலாது. ஆனால், உலகிற் சிறந்த இலக்கியம் எழுதின கம்பன் இதோடு விடுவானா? இல்லை; ஒரு படி மேலே செல்கிறான். இராகவன் கூறும் இறுதிப் பாடலைப் பாருங்கள்: 'ஆதலால் அபயம் என்ற பொழுதத்தே அபய தானம் ஈதலே கடப்பாடு) என்பது இயம்பினர் என்பால் வைத்த காதலால் இனிவேறு) எண்ணக் கடவதென் ? கதிரோன் - * மைந்த ! கோதிலா தவனை நீயே என்வயிற் கொணர்தி ? என்றான் ! (வீடணன் அடைக்கலப் படலம், 120) என்ன? மயக்கம் வருகிறதா? ஒருவராவது அபயம் என்ற சொல்லைக்கூடக் குறிக்கவில்லை என்பதைக் கண்டோ மல்லவா? மாருதிகூடச் சொல்லாத ஒரு கருத்தைசொல்லை-எவ்வளவு அழகாக இந்த வழக்கறிஞன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/158&oldid=770671" இலிருந்து மீள்விக்கப்பட்டது