148 கம்பன் கலை அவர்கள் கூறியதுபோல் கூறி விடுகிறான்! அபயதானம் ஈதலே கடப்பாடு என்பது இயம்பினர் என்று கூறுவதற்கு எவ்வளவு சாமர்த்தியம் வேண்டும்! ஆனால், இதன் முன்னர் இராகவன் சொற்பொழிவில் தம்மை மறந்து நிற்கும் அவர்கள் தாங்கள் இவ்வாறு கூறவில்லை என்பதையும் மறந்து விட்டார்கள். கூறாததை மறந்தது மட்டுமன்று கூறியதாகவுங்கூட நினைந்து விட்டனர். இராகவன் சொல்வன்மையால் நடவாதது நடந்ததுபோல் நிலைபெற்று விட்டது. இம்மட்டோடு இராகவன் நிறுத்தவில்லை என்ப்ால் வைத்த காதலால்' என்றுங்கூடக் கூறிவிட்டானல்லவா? இனி ஒரு வேளை சுக்கிரீவன் தான் கூறியதை நினைந்து பார்த்து, நான் அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று கூறவில்லையே?’ என்று கூறமுடியுமா? முடியாது. அவ்வாறு கூறினால் இராகவன் மேல் அன்பு இல்லை என்று அல்லவா பொருள் ஆகிவிடும்? எனவே, தன் கருத்துக்கு விரோதமாக ஒருவரும் பேசக்கூடாத நிலையை உண்டாக்கிக் கொண்டான் இராகவன். அதுவும் என்பால் வைத்த காதலால்' என்ற மூன்று சொற்களால் வாதத்தை முடித்துவிட்டான். இனியும் அம்முடிவிற்கு அரண்செய்கிறான் அயோத்தி வேந்தன். இனி வேறு எண்ணக் கடவது என்? கதிரோன் மைந்த!..கொணர்தி: என்று கூறி முடிக்கிறான். மேலும் அவ்வாதத்தில் மனஞ் செலுத்தாதவாறு அவர்களைத் தடுத்தும் விட்டான். அவன் வன்மையால் அவர்களை அவ்வாறு செய்துவிட்டான். வேறு வன்மையன்று, சொல்வன்மை ஒன்று கொண்டே இவ்வரும் பெருங் காரியத்தைச் செய்துவிட்டான். மறுத்துப் பேசிய அனைவரிலும் சுக்கிரீவன் ஒரு புது எண்ணத்தை வெளியிட்டதைக் கண்டோமல்லவா? எனவே, அந்தச் சுக்கிரீவனுக்கே வீடணனைக் கொணருமாறு கட்டளை பிறப்பிக்கிறான் இராகவன். இதைவிடச் சிறந்த அரசியல் தந்திரம் வேறு என்ன இயலும்? அமெரிக்க ஜனாதிபதி
பக்கம்:கம்பன் கலை.pdf/159
Appearance