விட்டிலன் உலகை அஞ்சி 151 தகப்பனாரைப் போலவே தானும் பழத்தை நறுக்கமுயன்று, அதற்குப் பதிலாகக் கையை வெட்டிக் கொண்டது. இஃது அறிவுக் குறைவால் நேர்ந்த துன்பம். கத்தியின் உபயோகம் என்ன என்பதை அறிவின் உதவியால் நன்கு அறிந்தவர்தாம் குழந்தையின் தந்தை. ஆனாலும் என்ன? அன்று மாலை ஒருவருடன் பலத்த சண்டையிட்டுக் கொண்டார் அவர். சண்டையில் எல்லையற்ற கோபம் அறிவை மறைத்து விட்டது. திடீரென்று மேசைமேல் இருந்த கத்தியை எடுத்து அடுத்தவரைக் குத்திவிட்டார். கத்தி அடுத்தவரைக் குத்துவதற்காகச் செய்யப்பட்டதன்று என்ற உண்மை தெரியும் அவருக்கு. ஆனாலும் ஆத்திரத்தில் தம் அறிவை இழந்துவிட்டார். கூர்மையான கத்தியைக் கண்டுபிடித்தது அறிவின் வேலை. அக்கத்தியைக் கொண்டு மனிதனைக் குத்தாமல், பழத்தை நறுக்கப் பயன்படுத்துவது பண்பாட்டின் பயன், அணுவைப் பிளப்பது அறிவின் வேலை. பிளந்த அணுவில் வெளிப்படும் சக்தியைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரைப் போக்கப் பயன்படுத்துவது பண்பாடற்ற பேதமையின் செயலாகும். - ஏன் பெரியவர் அறிவை இழந்து கத்தியை கொண்டு பிறரைக் குத்தினார்? அறிவுமட்டும் இருந்தால் அது சமயத்தில் மழுங்கிவிடும். அறிவுடன் பண்பாடும் இருத்தல் வேண்டும். அறிவு, பண்பாடு என்ற இரண்டும் சேரும் பொழுதுதான் மனிதன் முழுத்தன்மையடைகிறான். பண்பாடற்ற அறிவுமட்டும் உடையவன் கொடிய காட்டு விலங்கை ஒத்தவன். மனிதன் விலங்கிலிருந்து எப்பொழுது வேறுபடுகிறான்? அறிவு, பண்பாடு என்ற இரண்டும் சேர்ந்தபொழுதுதான். -
பக்கம்:கம்பன் கலை.pdf/162
Appearance