பக்கம்:கம்பன் கலை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 ம் கம்பன் கலை அறிவைப் பற்றி வள்ளுவர் என்ன சொன்னார்? தீமையை ஒதுக்கிவிட்டு நல்லதில் செலுத்துவதே அறிவு என்றார். சிலர் தமக்கு ஏற்படும் தீமைகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ள முயல்வர்; ஆனால், பிறருக்கு ஏற்படும் தீமைகளைத் தடுக்க முயல மாட்டார்கள். அப்படியானால் இந்த மாதிரி ஆட்களையெல்லாம் அறிவுடையவர் என்று கூறிவிட முடியுமா? மறுபடியும் வள்ளுவர் பேசுகிறார்: 'அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை' என்று. உண்மையான அறிவு எது? பிறர் படும் துன்பத்தைக் கண்டு அதைத் தன்னுடைய துன்பமாகக் கருத வேண்டும். அதுவே உண்மையான அறிவு எனப்படும். அப்படிக் கருதுவதனால் சில சமயம் தனக்கே துன்பம் வரலாம். வந்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்பவனே அறிவுடன் பண்பாடும் கலந்த மனிதனாவான். ஒரு காலத்தில் மூலப் பொருள்களைப் பிரித்துக் கொண்டே சென்ற விஞ்ஞானி ஒருவர், பொருளின் மிகச் சிறிய அளவுக்கு அணு என்று பெயரிட்டார். அணு என்ற :சொல்லக்குப் பிளக்க முடியாதது என்பதே பொருள். என்னே மனிதனின் அறியாமை! பிளக்க முடியாதது என்று கருதி, அணு என்று பெயரும் இட்ட பொருளைப் பிளந்தான் பிற்கால விஞ்ஞானி. ஒரு பொருள் என்று கருதிய அணுவினுள் ஓர் உலகமே இருக்கக் கண்டான். நம் நாட்டவர் அணுவினுள் ஒர் உலகமே இருப்பதை மிகப் பழங்காலத்திலேயே கண்டனர். அணுவினைச் சத கூறிட்ட கோண் எனக் கம்பநாடன் கூறும்பொழுது, அணுவினுள் இருக்கும் பல்வேறு உறுப்புகளையும் இவர்கள் அறிந்திருந்தார்களோ என்றுகூட நினைக்க வேண்டி யிருக்கிறது. அணுத்தரு தன்மையில் ஐயோன் காண்க அணுவுக்கும் சிறியவனாக உள்ளான் கடவுள்) என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/163&oldid=770677" இலிருந்து மீள்விக்கப்பட்டது