பக்கம்:கம்பன் கலை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டிலன் உலகை அஞ்சி 153 மாணிக்கவாசகர் கூறுகிறார். நம்மவர்கள் அன்று அனுமானத்தாலும் அறிவாலும் கண்டு கூறிப்போன உண்மைகளை இன்று மேனாட்டார் விஞ்ஞான அறிவால் வெளியிடுவது போற்றற்குரியது. அணுவைப் பிளக்கின்றவரை மேனாட்டாருடைய அறிவை உலகம் போற்றியது. ஆனால், இந்த அறிவு பண்பாட்டுடன் கலவாத பொழுது, அதை என்னவென்று கூறுவது? பண்பாட்டுடன் கலவாத அறிவை நம்மவர் என்றைக்குமே பாராட்டினதில்லை. அரம் போன்ற கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும் மக்கட்பண்பு இல்லாதவர்கள் மரம் போன்றவர்களே என்று கூறுகிறார் வள்ளுவர். இந்த ஒரு குறளுக்கு விரிவுரை செய்கிறான் கமபநாடன: - . இலக்குவனும் இந்திரசித்தனும் பகைவர்கள்; சம பலம் உடையவர்கள். தெய்வாம்சமான பல ஆயுதங்களை வைத்திருப்பவர்கள். தெய்வாம்சம் என்றால் என்ன? அழித்தல் தன்மையில் ஒப்புயர்வற்றது என்பதே பொருள். இருவரும் பிரமாஸ்திரம்' என்ற ஒன்றைப் பெற்றிருந்தனர். தற்காலத்திய ஹைட்ரஜன் குண்டு போன்றதே பிரமாஸ்திரம் எனப்படும் நான்முகன் படை, அவரவர் அறிவு வன்மையாலும், வர பலத்தாலும் இப் படைக்கலங்களைப் பெற்று வைத்திருந்தனர். ஆனாலும் இருவரிடையேயும் எவ்வளவு வேறுபாடு? அறிவு மட்டும் உடையவனாய்ப் பண்பாடு இலாதவனாய் உள்ள இந்திரசித்தன், அப் படைய்ைப் (பிரமாஸ்திரத்தைப்) பயன்படுத்தச் சிறிதும் பின்வாங்கவில்லை. அதனால் விளையும் கொடிய பயனைப்பற்றி அவன் ஒரு சிறிதும் கவலைப்படவே இல்லை. பிறர் படும் துயரம் கண்டு உள்ளம் வருந்தும் பண்பாட்டைப் பெறாத கசடனாய் விட்டான் இந்திரசித்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/164&oldid=770678" இலிருந்து மீள்விக்கப்பட்டது