பக்கம்:கம்பன் கலை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டிலன் உலகை அஞ்சி 155 முழுவதிலும் போர் இல்லாமற் செய்து அமைதியை நிலைநாட்டப் போகிறோம் என்று மார் தட்டிக் கொள்பவர்கள். பின்னர் ஏன் ஐயா இவ்வளவு தயாரித்துச் சோதனையும் செய்கிறீர்கள்? என்று கேட்டால், அவர்கள் கூறும் விடை விந்தையானது. போர் இல்லாமல் தடுக்கவும் பகைவர்கட்கு அச்சம் ஊட்டவுமே தாங்கள் இப் பரிசோதனையைச் செய்வதாகக் கூறுகின்றார்கள். போர் இல்லாமல் செய்ய என்று அவர்கள் கூறும் காரணம் சரியென்றே தோன்றுகிறது. இன்னும் கொஞ்ச காலம் இப் பரிசோதனை நடத்தினால் போரே இல்லாமல் போய்விடலாம்! ஏனென்றால், அதற்குள் அனைவரும் கதிரியக்கத்தால் அழியவும் நேரிடலாம்! இன்றைய வல்லரசுகளில் மனிதப் பண்பாடுடை யவர்கள் யாரும் இல்லையா? அறிவால் மிகுந்த மேல்நாட்டுக்காரர்கள் பண்பாட்டை மறந்துவிட்டார்கள். உலகத்தை அழிக்க முற்படும் அவர்கள், தம்மைத் தாமே அழித்துக் கொள்வதை அறியவில்லை என்பது வருத்தத்துக்குரியதே. - பண்பாடற்றவனாகிய இந்திரசித்தன்கூட ஓர் உண்மையை அறிந்திருந்தான். தன் பகைவனாக இருப்பினும் இலக்குவனுடைய பண்பாட்டை நன்கு அறிந்திருக்கிறான் என்றே கூற வேண்டும். நிகும்பலையில் யாகம் செய்ய முடியாமல் இலக்குவனிடம் அடிபட்டுத் தந்தையாகிய இராவணனைக் காணப் போகிறான் இந்திரசித்தன், இராவணனைப் பார்த்து இந்திரசித்தனே கூறுகிறான்: "ஐய! இவ்வுலக முழுவதையும் ஆக்கின திருமாலின் படையாகிய நாராயணாஸ்திரத்தையே இலக்குவன் மேல் ஏவினேன். ஆனால், அந்த அஸ்திரம் அவனை ஒன்றும் செய்யாமல் சுற்றி வந்து வணங்கிச் சென்றுவிட்டது”. இந்தச் செய்தியைக் கூறும்பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/166&oldid=770680" இலிருந்து மீள்விக்கப்பட்டது