156 & கம்பன் கலை இலக்குவனுடைய பலத்தில் இந்திரசித்தன் கொண்ட மதிப்பு வெளியாகிறது. ஆனால், அடுத்து அவன் கூறும் செய்தி இன்னும் விந்தையானது. . "தந்தையே! அந்த இலக்குவன் அவ்வளவு பலமுடையவனானால் என்னை எவ்வாறு உயிரோடு திரும்பவிட்டான் என்று கேட்கிறாயா? அதையும் சொல்கிறேன் கேள். அவன் என்னைக் கொல்ல நினைத்தான். ஆனால், என்னைக் கொல்கையில் பிறர் துன்பமடைவதை அவன் விரும்பவில்லை. அதனால் போர்க் களத்தில் பிரமாஸ்திரத்தைத் தொடுக்கவே இல்லை. என்மேல் கொண்ட இரக்கத்தால் அவன் தொடுக்காமல் விடவில்லை. அதைத் தொடுத்தால் அதனால் உலகத்துக்கு ஏற்படுகிற தீங்கை நினைத்தே இலக்குவன் பிரமாஸ்திரத்தை விடவில்லை என்ற பொருளில் கூறுகிறான்: முட்டிய செருவில் முன்னம் முதலவன் படையை என்மேல் விட்டிலன் உலகை அஞ்சி, ஆதலால் வென்று மீண்டேன்' நான் இப்பொழுது உயிருடன் மீண்டு உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம், இலக்குவன் பிரமாஸ்திரத்தைத் தொடுக்க வில்லை என்பதுதான். ஏன் தொடுக்கவில்லை? என்மேல் ஏற்பட்ட கருணையாலும் அச்சத்தாலும் அவன் தொடுக்கவில்லை. • விட்டிலன் உலகை அஞ்சி என்ற சொற்களுக்கு இரண்டு வகையாகப் பொருள் கூறலாம். உலகம் அழிந்துவிடுமே என்று பயந்து' என்பது ஒரு பொருள். 'உலகத்தார் பழி சொல்வார்களே என்பது இரண்டாவது பொருள். இந்திரசித்தன் பேசியது முதலாவது பொருளில்தான் என்றாலும், இன்றைய நிலைமைக்கு இரண்டாவது பொருளையும் ஏற்றுக்கொள்ளலாம். நம்முடைய நாட்டுப் பிரதமரிலிருந்து ஜப்பான் தேச மக்கள்
பக்கம்:கம்பன் கலை.pdf/167
Appearance