இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விட்டிலன் உலகை அஞ்சி 157 வரை அத்தனை பேரும் பழி தூற்றுகிறார்கள், இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளில் உள்ள அறிவுடைய பெருமக்களும் பழி தூற்றுகிறார்கள். இருந்தாலும் என்ன? கத்தியைத் தவறாகப் பயன்படுத்தும் குழந்தைகள் போன்றவர்கள் அல்லர் இவர்கள். ஆத்திரத்தில் அறிவை இழந்து கத்தியால் மனிதனைக் குத்தும் தந்தையைப் போன்றவர்கள் இவர்கள். மக்கட்பண்பு இல்லாமல் அரம் போன்ற கூர்மையான அறிவு படைத்தவர்கள். ஹைட்ரஜன் குண்டு சோதனை செய்யும் பிரிட்டிஷ், அமெரிக்க, ரஷிய ஆட்சியாளர் மனம் மாறியதாகவே தெரியவில்லையே! உலகை அஞ்சி இனிச் சோதனை நடத்தாமல் இருப்பார்களா? . . . . . . . . . . . . . . .