பக்கம்:கம்பன் கலை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ஒரு பாட்டுடையான் கம்பனுடைய பெருங்காப்பியத்தில் அளவால் பெருமை பெற்றவர்களும் இயல்பால் பெருமை பெற்றவர்களும் பலர் உண்டு. இராமனையே தலைவனாகக் கொண்டு காப்பியம் தோன்றினாலும், இராமனைவிட அதிகப் பாடல்களைப் பெற்று விளங்குகின்றான் அரக்கர் கோமான். எனவே, அதிகமான பாடல்களைப் பெற்றிருக்கின்ற காரணத்தால் ஒரு பாத்திரத்தை அதிகச் சிறப்புடையதென்று கூறுவதற்கும் இல்லை. இன்னும் சில பாத்திரங்கள் அதிகமான பாடல்களைப் பெறவில்லை யானாலும் கம்பநாடனுடைய முழுப் பரிவிற்கும் பாத்திரமாகி நிற்கின்றனர். அனுமன், பரதன் போன்றவர்கள் இலக்கிய உலகிலேயே தலைசிறந்த எடுத்துக் காட்டுகளாக விளங்கவேண்டுமென்ற நோக்கத்துடனேயே படைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. ". அதிகமான பாடல்களைப் பெற்றுள்ளவன் அரக்கர் கோமான் என்றால், இதற்கு நேர் முரணாக ஒரே பாடலைப் பெற்று விளங்குகிறான் தசரதனுடைய கடைசி மைந்தன். பல சமயங்களில் தான் பெற்ற பிள்ளைகள் நால்வர் என்ற எண்ணமும், தனக்கு சத்துருக்கன் என்ற நாலாவது பிள்ளை ஒருவன் உண்டென்ற எண்ணமும் தசரதனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/169&oldid=770683" இலிருந்து மீள்விக்கப்பட்டது