பக்கம்:கம்பன் கலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபெரும் அவதாரங்கள் 9 "வல்லை ஆகின் வாங்குதி தனுவை" "உனக்குச் சக்தி இருந்தால் இந்த வில்லை வாங்கடா” என்று சொன்னான். அர்த்தமில்லாமல் திடீரென்று ஒருவனை எதிர்ப்பட்டு இந்த மாதிரி தன்னுடைய வரலாற்றைச் சொல்லி, "தைரியம் இருந்தால் என்னோடு சண்டை போட வா” என்று சொல்வது பொருத்தமில்லாத செயல். எனவே அதற்கு ஒரு பொருத்தம் கற்பிக்கின்றான் பின்னே, "நான் எங்கேயோ மலையில் தவம் பண்ணிக் கொண்டிருந்தேன். நீ ஒரு ஒட்டை வில்லை ஒடித்தாயே உன் கல்யாணத்தின் போது, அது என் காதில் விழுந்தது. அப்போதுதான் சிந்தித்தேன். அது ஏற்கெனவே உடைந்துபோன சிவதனுசு என்று. அதை உடைத்து நீ பெரிய வீரன் ஆகிவிட்டாய். உலகமெல்லாம் மிகப்பெரிய வில்லை வளைத்தவன் என்று உன்னைப் பேசுகின்றது. அதை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அது உடைந்த வில் என்று எனக்குத்தான் தெரியும். ஆகவே இப்போது உன்னைச் சந்திக்க வந்தேன்" என்று பேசுகிறான். இந்த நிலையிலே கவிச்சக்கரவர்த்தி அற்புதமான நாடகமாக இதை ஆக்கிக் காட்டுவான்-மூன்று பாத்திரங்கள் வாயிலாக, உலகத்தையெல்லாம் வென்றதாகச் சொல்லிக் கொண்டு தசரதன் என்று பெயர் வைத்துக்கொண்டு ஒரு பாத்திரம். அமைதியே வடிவான சக்கரவர்த்தித் திருக்குமாரனாகிய இராகவன் ஒரு பாத்திரம், பரசுராமன் ஒரு பாத்திரம். பரசுராமன் வருவது, பேசுவது இரண்டும் எண்ணெயிலே போட்ட அப்பம்போல கொதிக்கின்ற ஒரு நிலை. இத்தனைக் கொதிப்பு, ஆத்திரம், துவேஷம், மாச்சரியம், காழ்ப்புணர்ச்சி, அகங்காரம்! இதன் எதிரே கொஞ்சங்கூட இதனாலே தாக்கப்படாமல் அமைதியாக இருந்து கொண்டு மிக மெள்ளத் தகப்பனாரைப் பார்த்துக் கேட்கின்றான் இராகவன், "இவன் யாரோ?" என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/17&oldid=770684" இலிருந்து மீள்விக்கப்பட்டது