பக்கம்:கம்பன் கலை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கம்பன் கலை காப்பியமே முடிகின்ற தருணத்தில் மீட்சிப் படலத்தில் நான்காவது தம்பியின் உண்மை உள்ளத்தைக் காண்கின்றோம். இராமன் சொன்ன நாட்கள் முடிந்துவிட்டன. கணிதப் புலவர்கள்கூட 'ஆண் தகைக்கு இன்று அவதி; அதாவது இன்றே அவன் வரவேண்டிய நாள் என்று கூறிவிட்டார்கள். இந்நிலையில் வாய்மை காக்கின்ற பரதன், நினைத்து இருந்து நெடும் துயர் மூழ்கிலேன்; மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன் என்ற முடிவுக்கு வந்து, நாலாவது தம்பியை அழைத்து வருமாறு ஏவுகின்றான். கண்ணிர் ஆறாகப் பெருக பரதன் நிற்கின்ற கோலத்தில், பக்கத்தில் சென்று, தொழுது நிற்கின்றான் மூவருக்கும் பின் உள்ளவனாகிய நாலாமவன். உடனே தன்னுடைய மார்போடு சேர்த்து இறுகத் தழுவிக் கொண்டான் பரதன். எதற்காகத் தன்னை அழைத்தான் அண்ணன் என்பதை அறியாமல் தவித்துக் கொண்டு நிற்கின்ற தம்பியிடம் அறத்தின் ஆணி வேர்ாகிய பரதன் பேசத் தொடங்குகிறான். "ஐய, வேண்டுவது உண்டு, அவ்வரம் தர்ற்பாற்று” என்கின்றான். அதாவது "உன்னிடம் ஒரு வரம் வேண்டி இருக்கிறேன்; அதனைத் தந்தே ஆக வேண்டு"மென்று கூறி, அது என்ன வரம் என்று தம்பி கேட்கும் முன்னரே தானே சொல்லத் தொடங்குகிறான். அவ்வரம் எது என்று கேட்பாயேயானால், "சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்; மின்னு தீயிடை யான் இனி விடுவன்; மன்னன் ஆதி என் சொல்லை மறாதி” என்றானாம். அதாவது, "இராகவன் சொன்ன நாளில் வரவில்லையாதலால், யான் நெருப்பில் வீழ்ந்து உயிரை விடப் போகிறேன். ஆனால், மன்னன் இல்லாமல் நாடு இருக்கக்கூடாது; ஆதலால் நீ மன்னனாக ஆவாயாக" என்று கூறி முடித்தான் பரதன். ஆனால் தசரதன் புத்திரர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/171&oldid=770686" இலிருந்து மீள்விக்கப்பட்டது