பக்கம்:கம்பன் கலை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 & கம்பன் கலை ஆனாத உயிர்விட என்று அமைவானும் ஒருதம்பி; அயலே நாணாது, யானாம்.இவ் அரசுஆள்வென்? என்னே, இவ் அரசாட்சி ! இனிதே அம்மா! 'காட்டை ஆள்வதற்காக-அரச பாரத்தைக் கைவிட்டுச் சென்றவனாகிய இராமனைக் காப்பாற்று வதற்காக-ஒரு தம்பி பின்னேயே போய்விட்டான். அப்படிப் போனவன் வரவேண்டிய நாள் கடந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டு மிகச் சிறந்த உயிரைவிட முடிவு. செய்துவிட்டான் மற்றொரு தம்பி. இவர்கள் இருவரும் ஒருபுறம் நிற்க, ஒரு சிறிதும் வெட்கம் இல்லாது நான் இந்த அரசாட்சியை ஆள வேண்டுமா? எவ்வளவு இனிய அரசாட்சி இது!" என்பதே இப்பாடலின் பொருள். - நாலாவது தம்பியின் மனநிலை முழுவதையும் இந்த ஒரு பாடல் காட்டி நிற்கின்றது. பரதன் கூறிய இந்தச் செய்தியை நினைக்கவும் முடியாமல் அஞ்சுகிறான் சத்துருக்கன். அந்த அச்சத்தின் பின்னே இத்தகைய ஒரு பைத்தியக்காரத்தனம் நடைபெறுமா என்று நினைத்த வுடன் 'மருட்கை தோன்றுகிறது. இந்த அரசாட்சியின் நிலையை நினைக்கும்பொழுது எள்ளல் தோன்றுகிறது. தன் மனநிலை தெரியாமல் பேசிய பரதன் உரைகளைக் கேட்டுக் கோபம் ஒருபுறமும், இவ்வளவு தவறாகத் தன்னை நினைந்து விட்டானே என்று நினைக்கும்பொழுது "அழுகையும், தான் இராமன் தம்பி அல்லையோ என்று நினைக்கும்பொழுது இளிவரலும் ஒருங்கே தோன்று கின்றன. பல சொல்லக் காமுறுவர் மன்ற, மாசற்ற சில சொல்லல் தேற்றாதவர் என்றும், சொல்லுக சொல்லில் பயனுடைய என்றும், பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும்திறன் இன்மை அறிந்து சொல்க என்றும் எழுந்த பொதுமறைக்கோர் எடுத்துக்காட்டாய், 'உருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/173&oldid=770688" இலிருந்து மீள்விக்கப்பட்டது