பக்கம்:கம்பன் கலை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 உவமை நயம் உவமை என்பது பேசத்தெரிந்த குழந்தை முதல் மாபெரும் கவிஞன் ஈறாக அனைவரும் பயன்படுத்துகின்ற ஒன்றாகும். 'அறிந்ததைக்கொண்டு அறியாததை விளக்கல்' என்பது உவமைக்குச் சொல்லப்படும் இலக்கணம். பற்பல சமயங்களில் அறிந்ததையே நன்கு விளக்கக்கூட உவமை, உருவகம் என்பவை பயன்படுகின்றன. மனிதனுடைய அறிவு விரிவதற்கேற்ப உவமையைக் கையாளுகின்ற திறமும் வளர்ச்சியடைகின்றது. ஆதியில், உவமை தோன்றக் காரணமாக இருந்தது மேலே குறிப்பிட்ட இலக்கணமாகும். என்றாலும், காலம் செல்லச் செல்ல அறிவுத் திறத்தையும்,அனுபவத்தின் ஆழத்தையும் வெளியிடும். கருவியாக உவமை அமைந்துவிட்டது. இதனால் தான் போலும் மொழி இலக்கணம் கூறவந்த தொல்காப்பியனார், 'உவம இயல்' என்ற ஒரு தனி இயலையே எழுதிச் சென்றார். நூற்றுக்கணக்கான உவம உருபுகள் தமிழ்மொழியில் நிறைந்து கிடப்பதற்கும் இதுவே காரணமாகும். பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு கார்ணங்களால் பல்வேறு உவமைகள் செய்ய வேண்டிய தேவை ஏற்படுவதால் இத்துணை அளவுக்கு உவம உருபுகள் தேவைப்பட்டன போலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/175&oldid=770690" இலிருந்து மீள்விக்கப்பட்டது