பக்கம்:கம்பன் கலை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை நயம் 165 சங்க இலக்கியம் தொடங்கிக் கவிச்சக்கரவர்த்தி பாரதி ஈறாகவுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் இலக்கியங்களில், தமிழ்க் கவிதைகளில் உவமை பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கின்றது. வினை, பயன், மெய், உரு என்ற நான்கும் பற்றி உவமை தோன்றும் என்று தொல்காப்பியனார் குறிப்பிட்டார். இந்த நான்கின் அடிப்படையில் இன்றைக்கு உவமை நாற்பதாக விரிந்து உள்ளது என்றுகூடக் கூறலாம். மேலே கூறிய நான்கு வகை உபமானங்களையும் அவற்றோடு தொடர்புடைய உருவகங்களையும் கம்பநாடன் பெரிதும் பயன்படுத்து கின்றான். எல்லாக் கவிஞர்களுமே உவமை, உருவகம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் இதன் தனிப்பட்ட சிறப்பு யாதாக இருத்தல் கூடும் என்று சிந்திக்கத் தோன்றுகிறது அல்லவா? உண்மையைக் கூறுமிடத்து ஒரு புலவனுடைய சிறப்பை அறிவதற்கு அவன் கையாளும் உவமை ஒன்றே போதுமானது எனலாம். அன்றாடம் நூற்றுக்கணக்கான பொருள்களை நம் போன்றவர்கள் காண்கின்றோம். ஆனால், இப்பொருள் களிடையே காணப்பெறும் ஒப்புமை நம் அறிவில் படுவதில்லை; பட்டாலும் அவற்றின் உண்மை விளங்குவதில்லை. இன்னும் பல சமயங்களில் புறத்தே காணப்படும் ஒப்புமை மனத்திற் படுகிறதே தவிர, ஆழ்ந்துள்ள ஒப்புமை நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. தொடர்பற்ற பொருள்களினிடையேகூடச் சிறந்த கவிஞன் ஒப்புமையைக் காண்கின்றான்; நம்மையும் காணுமாறு செய்கின்றான். நாம் கண்டுங் காணாத பொருள்களை விளக்க உதவுவதுடன், அடிக்கடி காணும் பொருள்களின் தனிச்சிறப்பை விளங்கிக்கொள்ளவும் உவமையைப் புலவன் கையாள்கிறான். ஆகவேதான், அவனுடைய புலமைச் சிறப்பு இதன்மூலம் வெளிப்படுகிறது என்று சொல்கிறோம். தருமம் என்ற ஒன்றைப்பற்றி நாம் கேள்விப்பட்டி ருக்கிறோம். என்றாலும், நுண்ணிய கருத்துப் பொருளாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/176&oldid=770691" இலிருந்து மீள்விக்கப்பட்டது