பக்கம்:கம்பன் கலை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கம்பன் கலை "யாரோ" வில் உள்ள ஒகாரம் இருக்கிறதே இது எள்ளல் குறிப்பு ஆகும். 'இவனை நான் பொருள்படுத்த வேண்டியதில்லை. இருந்தாலும் இவன் யார் எனக் கொஞ்சம் அறிமுகம் செய்வாயாக" எனத் தந்தையைத்தான் பார்த்துக் கேட்டான் இராகவன். ஆனால் பதில் சொன்னவன் பரசுராமன், இப்படிப் பரசுராமன் பதினொரு பாடல்களிலே ஆத்திரமாக வந்து, இரண்டு பாடல்களிலே தான் வந்து விட்ட கருத்தைத் தெரிவித்துவிட்ட அளவிலே தசரதன் குறுக்கிடுகின்றான். எந்த நிலையிலே குறுக்கிடுகின்றான்? "ஐயா, எளியாரிட்ம் வலியார் வலி என்னாம்? நாங்கள் அப்பாவி மனிதர்கள். இப்போதுதான் என்மகன் திருமணம் முடித்து வந்திருக்கிறான். உங்கள் வலிமையை எதிர்நோக்கும் வல்ல்மை எங்களுக்கில்லை. அப்படியிருக்க எளியாரிடை வலியார் வலி என்னே! வலியார் வலி எங்கே பயன்படுத்தப்பட வேண்டும் தன்னை யொத்த வலியாரிடத்தில், எங்களைப் போன்ற எளியாரிடத்தில் வந்து நீ இதைப் பேசுவது நியாயம் அல்ல” என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் மிகக் கீழே இறங்கி விடுகின்றான் தசரதன். இராகவனைப் பெற்றவன் என்கிற நினைவுகூட அவன் மனத்தில் இல்லாமல் மிகக் கீழே இறங்கி விடுகின்றான். "என்மகன் அணையான் உயிர் தபுமேல்" "உன்னுடைய ஆக்ரோஷம் காரணமாக என் மகனுக்கு ஓர் ஆபத்து வந்தால் அவன்மட்டுமல்ல-நானும், நான் மட்டுமல்ல-என் குடும்பமும், என் குடும்பம் மட்டுமல்லநாடு முழுவதும் இறந்துபட நேரிடும்” என்று பேசுகின்றான். ஆக, ஆணவத்தின் முன்னே எவ்வளவு கீழிறங்கிப் போகிறான் தசரதன் என்பதை வேண்டுமென்றே வைத்துக் காட்டுகின்றான் கவிச்சக்கரவர்த்தி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/18&oldid=770695" இலிருந்து மீள்விக்கப்பட்டது