பக்கம்:கம்பன் கலை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை நயம் 169 மற்றொரு வேடன், திண்ணனார் காலம் தாழ்ந்து வந்ததைக் கண்டு சினந்து, "என் செய்தாய் திண்ணா நீ?" என்று கேட்கின்றான். ஆனால், அவன் கேட்ட கேள்வியைக் காதிற்கடிடத் திண்ணனார் வாங்கிக் கொள்ளவில்லை. இதனிடையில் திண்ணனாருடன் மலை ஏறிச் சென்றிருந்த நாணன், காடனுக்கு விடை கூறுபவனாகிக் கீழ்க்கண்டவாறு பேசுகின்றான்: 'அங்(கு) இவன் மலையில் தேவர் தம்மைக்கண்(டு) அனைத்துக் கொண்டு வங்கினைப் பற்றிப் போதா வல்லுடும்(பு) என்ன நீங்கான் என்று பேசுகின்றான். அதாவது "மலையின்மேல் உள்ள குடுமித்தேவரை அனைத்துப் பிடித்துக் கொண்டு, மரப்பொந்தைப் பற்றிக்கொண்டு விடாத உடும்பைப் போல் விடமாட்டேன் என்று தங்கிவிட்டான்" என்று கூறுகின்றான். திண்ணனார் இறைவனைப் பற்றிக்கொண்டு விடமாட்டேன் என்று இருந்த ஒப்பற்ற செயலை இந்த உவமையினால்தானா விளக்கவேண்டும் என்று நாமே வியப்படைகிறோம்! பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடுகின்ற சேக்கிழார் இந்த உவமையை எவ்வாறு கையாண்டார் என்றும் வியக்கிறோம். ஒரு சிறிது சிந்தித்துப் பார்த்தால் உண்மை புலப்படும். இவ்வேடுவர் இருவரும் கல்வி வாசனையோ பிற பண்போ சிறிதும் இல்லாதவர்கள். எனவே, நாணன் கூற்றாக வருகின்ற உவமை இதைவிட உயர்ந்ததாக இருந்திருப்பின் அது சேக்கிழாருடைய கவித்திறனுக்கு ஏற்றதாகாது. உண்மையைக் கூறவேண்டுமானால் இம் மாதிரி இடங்களில் பாத்திரத்தின் பண்பை விளக்குகின்ற. உவமையாக அமையவேண்டுமே தவிர உயர்ந்ததாக மட்டும் அந்த உவமை இருத்தல் தகாது. இந்த உவமையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/180&oldid=770696" இலிருந்து மீள்விக்கப்பட்டது