பக்கம்:கம்பன் கலை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 முரணில் முழுமுதல் ஆதி மனிதன் என்று சிந்திக்கத் தொடங்கினானோ, அன்றே அவனைச் சுற்றிலுமுள்ள முரண்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினான். கறுப்பு, வெள்ளை என்ற முரண்பாட்டிலிருந்து உலகம் முழுவதும் முரண்களால் நிறைந்திருக்கக் கண்டான். ஒன்றுக்கொன்று நேர்மாறாக அமைந்திருக்கும் இவ்வுலகின் உட்பொருள் யாது என அவன் நினைக்கத் தொடங்கினான். அன்பே வடிவான பசுமாட்டைக் காட்டிலே கண்டான் ஆதி மனிதன். ஆனால், அதே காட்டில் கொடுமையே வடிவான புலியும் வாழ்வதைக் கண்டான். தத்தம் வாழ்வை நடத்திச் செல்லுகின்ற முறையில் அவை அவை சிறந்தவைதாம். எதனை உயர்ந்தது என்று கூறுவது? எதனைத் தாழ்ந்தது என்று கூறுவது? - - - X வெய்யிலில் கிடந்து அவதியுற்றான் ஆதி மனிதன். ஆனால் அதன் மறுதலையான குளிர் வந்தபொழுதும் துன்புற்றான். பல முறை வெய்யில் சிறந்ததா, குளிர் சிறந்ததா என்ற வினாவை அவனே எழுப்பியிருத்தலுங் கூடும். இரண்டிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு என்பதை அவன் காணப் பல்லாண்டுகள் ஆகியிருத்தல் கூடும். தன்னைச் சூழ்ந்து நிற்கும் இயற்கையில் முரண்பாட்டைக் கண்ட அவ் ஆதி மனிதன் வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/184&oldid=770700" இலிருந்து மீள்விக்கப்பட்டது