பக்கம்:கம்பன் கலை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரணில் முழுமுதல் 175 உலகம் அமைதியுற்று வாழ்வதால் இன்பத்தை அடையக் கூடும் என்பதை மனிதன் தன் வாழ்விலிருந்தே அறிந்து கொண்டான். அப்படியானால், ஏன் உலகில் அமைதி இல்லை என்ற வினா பிறந்தது. அமைதி: கெடுவதற்குக் காரணம் முரண்பாடே என்ற முடிவுக்கு வந்தான் மனிதன், அவ்வாறாயின், முரண்பாட்டை ஒழித்துவிட்டால் அமைதி கிட்டுமே என்ற முடிவுக்கு வந்தான். முரண்பாட்டை அழிக்கவேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். பாவம், முரண்பாட்டை, இயற்கையில் எங்கும் நிறைந்த முரண்பாட்டை, என்றும் எங்கும் நிலைத்துள்ள முரண்பாட்டை அழிக்கப் புகுவதே ஒரு முரண்பாட்டிற்கு அடிகோலுவதாகும் என்பதை மனிதன் அன்றும் தெரிந்து கொள்ளவில்லை; உலக அமைதியைப் போரிட்டாவது பெற்றுத் தருகிறேன் என்று இற்றை நாள் மனிதன் மார்தட்டும் நிலையிலும் தெரிந்துகொள்ள வில்லை. என்ன செய்வான் மனிதன்? முரண் நீங்கினால் அமைதி கிட்டும். அமைதி கிட்டினாலொழிய முரண் நீங்க வழியில்லை. இவ்வாராய்ச்சியில் ஈடுபட்ட மனிதன், நாய் தன் வாலைப் பிடிக்கச் சுற்றிச்சுற்றி வருவதுபோலச் சுற்றிச்சுற்றி வந்தான். இங்ங்னம் பல்லாண்டுகள் கழிந்தன. எவ்வாறாயினும் முரண்பாட்டை அழிக்கவேண்டும் என்ற அவனுடைய கொள்கை உறுதிப்படலாயிற்று. இந்நிலையில் முரண் பாட்டின் அடிப்படையை ஆயத் தொடங்கினான் மனிதன். முரண்பாடுகள் என்பவை உண்மையில் முரண்கள்தாமா? கறுப்பின் நேர் எதிர்தானா வெளுப்பு: தீமையின் நேர் எதிர்தானா நன்மை தோல்வியின் நேர் எதிர்தானா வெற்றி இவ்வாறு முரணின் அடிப்படையை ஆயத் தொடங்கிய பொழுதுதான் மனிதனுக்குச் சில உண்மைகள் தெரியலாயின. முரண்பட்ட பொருள்களை எடுத்துக் கொண்டு மேலாக ஆயுமிடத்து அவற்றுள் முரண்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/186&oldid=770702" இலிருந்து மீள்விக்கப்பட்டது