பக்கம்:கம்பன் கலை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கம்பன் கலை காணப்படினும் ஆழ்ந்து ஆயும்பொழுது அம் முரண்பாடு சிறிதுசிறிதாக விலகத் தொடங்கியது. ஒன்றிலிருந்து மற்றொன்று வெளிப்படுவது போலவும் தோன்றத் தொடங்கியது. நன்மை, தீமை என்பவை ஒரே பொருளின் இரு புறங்கள்தாமோ என்றுகூட் நினைக்க வேண்டிய தாயிற்று. முழுவதும் ஒளியென்றும் இருளென்றும், கறுப் பென்றும் வெள்ளையென்றும், நன்மையென்றும் தீமையென்றும் கூறத் தக்கன ஒன்றும் இல்லை என்பதை உணரத் தொடங்கினான் மனிதன். ஒரு நிலையிலிருந்து காணும்பொழுது நன்மையாகப் படுவதே, பிறிதொரு நிலையிலிருந்து கானும் பொழுது தீமையாகப் படுகிறது. புலி கொல்வது கொடுமையுடையதாகப் படினும், அதன் குட்டியின் பசி தணிக்கச் செய்யும் முயற்சியே அது என்று நோக்கும் பொழுது அன்புடைய செயலாகவே தோன்றலாயிற்று. மேலாகப் பார்க்கும்பொழுது தம்முள் மாறுபட்டவை அல்லது முரண்பட்டவை என்று நாம் கருதும் பொருள்கள், ஆழ்ந்து சிந்திக்கும் பொழுது ஒரளவு முரண்பாட்டை இழந்து விடுகின்றன. இளமைக்கு முதுமை முரண்; முதலுக்குக் கடை முரண், கலத்தலுக்குக் கலவாமல் இருத்தல் முரண் என்று எல்லாம் கருதுகிறோம். இம்முரண்பாடுகளிடையே எவ்விதமான ஒற்றுமையும் இல்லை என்றும், ஒன்றுக்கொன்று நேர்மாறான நிலைகள் இவை என்றும் அனைவரும் கருதுகிறோம். சிந்தித்துப் பார்க்கும்பொழுது இந்த நேர்மாறான நிலைகளிடையே ஓர் ஒற்றுமைத் தன்மை விளங்கக் காண்கிறோம். வருதல் ஆகிய செயலுக்கும், வாராது இருத்தல் ஆகிய செயலுக்குமுள்ள ஒற்றுமையைப் பின்னர் ஒரளவு விரிவாகக் காணலாம். ஒளி என்பதும் இருள் என்பதும் தனித் தனியானவை அல்ல;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/187&oldid=770703" இலிருந்து மீள்விக்கப்பட்டது